வீடியோ: கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு பிடி வீரரை தாக்க முற்பட்ட ராஜநாகம் - kingcobra hunted Bengal monitor
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் பெல்தங்கடியில் உள்ள மேலந்தபெட்டு கிராமத்தில் ராஜநாகம் ஒன்று உடும்பை வேட்டையாடியது. அது குடியிருப்பு பகுதி என்பதால் கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் பாம்பு பிடி வீரர் அசோக்குமார் சம்பவயிடத்திற்கு விரைந்து ராஜநாகத்தை பிடித்தார். இதனிடையே ராஜநாகம் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை தாக்கு முற்பட்டது. இருப்பினும் அவர் லாவகமாக தப்பித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்கில் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST