வீடியோ: 2ஆவது நாளாக கடும் பனிப்பொழிவு; திருவள்ளூரில் பொதுமக்கள் அவதி - Heavy fog in Tiruvallur
🎬 Watch Now: Feature Video

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு, ஒலி எழுப்பிக்கொண்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பனி காரணமாக ரயில்களும் காலதாமதமாக செல்கின்றது. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஹாரன் அடித்துக் கொண்டு மெதுவாக சென்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST