Yummy சூடான நொறுக்குத்தீனி 'சேவு' செய்யும் எளிய செய்முறை வீடியோ!
🎬 Watch Now: Feature Video
அனைத்து காலநிலைகளிலும் அனைவராலும் விரும்பப்படும் நொறுக்குத் தீனிதான் சேவு, இதனை நாம் அனைவரும் பெரும்பாலும் கடைகளில் சென்றுதான் வாங்கி வருகிறோம். எளிதான முறையில் எவ்வாறு இதனை செய்வது என்பது குறித்த செய்முறை வீடியோ இதோ... வீட்டிலிருக்கும் கடலை மாவு, தட்டாம் பயிறு மாவு கொண்டு இதனை எளிதாக செய்யலாம். இந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
செய்முறை: ஒரு கலவை பாத்திரத்தில் அனைத்து மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அரைத்த மிளகு, கீல், ஏலக்காய்த் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். போதுமான தண்ணீரைப் பயன்படுத்தி, மென்மையான மாவாக பிசையவும். மாவை ஒரு உருளை வடிவில் வடிவமைத்து, மாவை ஒரு "செவ் பிரஸ்ஸில்"(முறுக்கு பிளியும் இயந்திரம்) நிரப்பி, சூடான எண்ணெயில் மெதுவாக அழுத்தி, பொன்னிறமாகும் வரை ஆழமாக வறுக்கவும். பின்னர் எண்ணெய்யை வடிகட்டி சரியான பதத்தில் வெந்ததா என பார்க்க வேண்டும். முழுமையாக ஆறவைத்து, காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST