Video:நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடாது பெய்யும் அடைமழை! - Farmers are happy because of widespread rains
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரியை அடுத்து நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக களியல் பகுதியில் 52.04 மில்லி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து 48 அடி நீர் மட்ட உயரம் கொண்ட பேச்சிப்பாறை அனையின் நீர்மட்டம் 37.98 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 382 கனஅடி நீரும் அணையிலிருந்து விநாடிக்கு 534 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்ட உயரம் 62.35 அடியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 238 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 175 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாகப்பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST