எட்டு மாத ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றம் - திமுக தலைவர் ஸ்டாலின் - மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
🎬 Watch Now: Feature Video
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் போது அளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் எட்டு மாத திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் பேசியுள்ள காணொலி திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரூ.16725 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கரோனா நிவாரண நிதி 8989 கோடி ரூபாய் தரப்படவில்லை என்றும் ஸடாலின் கூறினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST
TAGGED:
ஸ்டாலின் தேர்தல் பரப்புரை