ETV Bharat / sukhibhava

உலக பார்வை நாள்: கண்களை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்வது எப்படி? - உலக பார்வை நாள்

உலக பார்வை தினத்தில் நாம் கண்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

World Sight Day
World Sight Day
author img

By

Published : Oct 8, 2020, 8:09 PM IST

'அழகு பார்ப்பவரின் பார்வையில் உள்ளது' அழகு என்பதை பெரும்பாலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அழகு என்பதற்கான அர்த்தத்தை பார்வையற்றவர்கள் அல்லது பார்வை குறைபாடுள்ளவர்களால் அறிந்திருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதிலும் குறைந்தபட்சம் 2.2 பில்லியன் மக்கள் பார்வையின்றியும் கண் பார்வை குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 1 பில்லியன் மக்களுக்கு பார்வை குறைபாடு சரிசெய்யப்படக்கூடியது அல்லது கவனித்தக்க வகையில் உள்ளது.

எனவே, இந்தக் குறைபாடுகளால் அவதிப்படும் மக்களை, உலகில் உள்ள மக்கள் கவனிக்கும்பொருட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2ஆவது புதன்கிழமை உலக பார்வையாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி இந்த வருடம் 'பார்வையில் நம்பிக்கை' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

பார்வை குறைவதற்கு என்ன காரணம்?

கண் பார்வை குறைவதற்கு நீரிழிவு மற்றும் டிராக்கோமா போன்ற நோய்கள், கண்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி, வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்றவை காரணங்களாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இருப்பினும், தற்போது எல்லா வயதினருக்கும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவின் தேசிய சுகாதார இணையதளத்தில் கண் பார்வை குறைவதற்கான பிற காரணங்களை கூறியுள்ளது.

அவை பின்வருமாறு:

  • கிட்டப்பார்வை (மையோபியா) போன்ற ஒளிவிலகல் பிழைகள்
  • ஸ்ட்ராபிஸ்மிக் அம்பிலியோபியா
  • கிளகோமா
  • ரெட்டினால் டேட்டாச்மெண்ட் (விழித்திரை பிரிவு)
  • ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா
  • முன்கூட்டியே ரெட்டினோபதி
  • ஆப்டிக் அட்ராபி போன்ற பார்வை நரம்பு நோய்கள்
  • பரம்பரை சிதைவு (ஸ்டார்கார்ட் நோய்)
  • அல்பினிசம்
  • நிஸ்டாக்மஸ்
  • மூளை பாதிப்பு

ஆரோக்கியமான கண்களுக்கான உதவிக்குறிப்புகள்

தேசிய சுகாதார இணையதளத்தில் ஒருவர் தனது கண்களை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை கூறுகிறது.

  1. நன்றாக சாப்பிடுங்கள்: உங்கள் உணவில் அதிக பச்சைக் காய்கறிகள் மற்றும் மஞ்சள், சிவப்புப் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  2. புகைப்பிடிக்கக்கூடாது: புகைப்பிடிப்பது கண்புரை, பார்வை நரம்பு பாதிப்பு, மாகுலர் சிதைவு போன்றவற்றிற்கு ஆபத்துக் காரணிகளாக அமையும்.
  3. புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சன்கிளாஸ்கள் அணியுங்கள்.
  4. அபாயகரமான வேலையின்போது பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்.
  5. கணினித் திரையிலிருந்து விலகிப் பாருங்கள்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். மேலும் 20 அடி தூரத்திற்கு 20 விநாடிகள் வரை பாருங்கள்.
  6. சரியான சுகாதாரத்தைப் பேணுங்கள்: கண்களைத் தேய்க்கும் முன் அல்லது கண்களைத் தொடும் முன் கைகளை சரியாகக் கழுவுங்கள்.
  7. வழக்கமான கண் பரிசோதனைகளுக்குச் செல்லுங்கள்.
  8. கண் தொற்றுநோய்களுக்கான மருந்துகளைத் தவிர்க்கவும்.
  9. வழக்கமான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது, உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், கண்களை ஆரோக்கியமாகவும் உதவுகிறது.

சிறந்த பார்வைக்கு பின்வரும் எட்டு உணவுகள் முக்கியம்

அவை பின்வருமாறு

சாப்பிடுவது என்பது வாழ்க்கை முறையில் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

சிறந்த உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கே

முட்டை

பாதாம்

கேரட்

ஆரஞ்சு

மீன்

இலை பச்சை காய்கறிகள்

சூரியகாந்தி விதைகள்

பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்

கோவிட் -19 கண்கள் வழியாகவும் பரவும் அபாயம்

நாம் இப்போது கோவிட்-19 தொற்றுநோயுடன் வாழ்ந்துவருகிறோம். மேலும் இந்த வைரஸ்கள் கண்களிலும் பரவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மக்கள் இது குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் போன்றவற்றால் காற்றில் வெளியாகும் நீர்த்துளிகள் வாய், மூக்கு மற்றும் கண்கள் வழியாக மற்றொரு நபரின் உடலில் நுழையலாம்.

எனவே கரோனா சூழலில் நாம் கண்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு பரிந்துரைக்கப்படுகிறது:

நெரிசலான இடத்திற்குச் செல்லும்போது ஒருவர் தனது கண்களை மறைத்தல் அவசியம். இதில் சாதாரண கண்ணாடி அணிவது உதவியாக இருக்கும்.

காண்டாக்ட் லென்ஸ்கள் அணிய விரும்பும் நபர்கள் சிறிது நேரம் கண்ணாடிகளுக்கு மாறுவது நல்லது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கைகளை கழுவாமல் கண்களைத் தேய்ப்பது அல்லது தொடுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் கண் மருந்துகளைத் தவிர்க்க வேண்டாம்.

முறையான சுகாதாரம் மற்றும் உடல் ரீதியான விலகல் நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும். குறிப்பாக ஒரு கண் மருத்துவரை (கண் மருத்துவர்) பார்வையிடும்போது இவற்றை செய்தால் நல்லது.

அவசியமெனில் மருத்துவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறவும். எனவே, மிகவும் தேவைப்படாவிட்டால் மருத்துவரை சந்திப்பதைத் தவிர்க்கவும்.

இதனால், கண் ஆரோக்கியத்தை புறக்கணிக்கக்கூடாது. மக்கள் வழக்கமான கண் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்களால் உங்கள் பார்வையை இழப்பதைத் தடுக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.