ஹைதராபாத்: தொற்றாத நோய்களின் தாக்கத்தில் அதீத கவலைக்குரிய பிரச்சினைகளைக் கொடுத்து வரும் வகையில், நீரிழிவு நோய் ஒரு சமூக நோயாக மாறி வருகிறது. இதை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை தினம் குறித்த விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க, உலக சுகாதார நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி உலக நீரிழிவு நோய்க்கு முந்தைய (World Pre Diabetes Day) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாகக் காணப்படுவதை நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை என மருத்துவ வழக்காடலில் கூறுகிறார்கள். ஆனால் இது டைப் 2 நிலையை எட்டும்போதுதான் நீரிழிவு நோய் என உறுதி செய்யப்படும். அந்த வகையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக காணப்படுவதைத் தான் நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை என்கிறார்கள்.
உலக அளவில் 3 பெரியவர்களில் ஒருவருக்கு இந்த நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இருக்கும் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இருதய நோய் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வேறு சில உடல் நல உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏன் ஆகஸ்ட் 14ஆம் தேதி நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது? ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய 90வது நாளில் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை நீரிழிவு நோயாக மாற 90 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அந்த 90 நாட்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை தினம் இன்று (14.08.2023) கடைப்பிடிக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகள்:
- குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி
- உடலில் தோல் உரிதல்
- கண் பார்வையில் குறைபாடு
- அதீத உடல் சோர்வு
- கால் வலி மற்றும் கூச்ச உணர்வு
- திடீர் உயர் ரத்த அழுத்தம்
- குறைந்த ஆற்றல்
நீரிழிவு நோய்க்கு முந்தைய காரணங்கள்:
- தூக்கமின்மை
- உட்கார்ந்த வாழ்க்கை முறை
- மது மற்றும் புகைப்பழக்கம்
- திடீர் உடல் எடை அதிகரிப்பு
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:
- ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
- உடல் மற்றும் மனதளவில் சுறுசுறுப்பாக இருங்கள்
- புகைபிடித்தல் பழக்கத்தைக் கைவிடுங்கள்
- உடல் எடையைச் சரிவரப் பராமரியுங்கள்
- தேவையான மருந்துகளை உட்கொள்ளுங்கள்
நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை குறித்துத் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த நிலை குறித்து தனிநபர் ஒருவர் அறிந்து கொண்டு அவரின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கடைப்பிடிப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தில் இருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பு, தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசுகள் என அனைத்து தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்னதான் பொதுவான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், உறக்கம், உடற்பயிற்சி, அடிக்கடி இரத்த பரிசோதனை உள்ளிட்ட சில விஷயங்களை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து தப்ப முடியும்.
இதை மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தில்தான் இன்று நீரிழிவு நோய்க்கு முந்தைய (Pre-Diabetes) நிலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்போம்..! நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக் கொள்வோம்"..!
இதையும் படிங்க: நடனமாடும்போது மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு.. உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணமா?