சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வது நமது உடலில் எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கும். உணவு உண்பதற்கும், உடற்பயிற்சிக்கும் இடையே சரியான நேர இடைவெளி இருப்பது மிக மிக அவசியம்.
குளிர்காலத்தில் எடை அதிகரிக்குமா?
குளிர்காலங்களில் பலருக்கு எடை அதிகரிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தப் பருவத்தில் செரிமான சக்தி பலப்படுவதால் தங்களை அறியாமலேயே அவர்கள் அதிக உணவு எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதிக உணவிற்குத் தகுந்தாற்போல வேலைகளைச் செய்யாமல், வழக்கம்போல செய்யும் வேலைகளை மட்டுமே செய்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
- கொழுப்பு, புரதம் அதிகமுள்ள உணவை எடுத்துக்கொண்ட பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் நிச்சயம் எடை அதிகரிக்கும்.
உடற்பயிற்சிக்கும் உணவுக்கும் உள்ள இடைவெளி
சாப்பிட்ட உணவு முழுமையாகச் செரிமானம் ஆவதற்கும், உடலின் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு முறை உணவு எடுத்துக் கொள்வதற்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளியைப் பராமரிப்பது முக்கியம். அப்போதுதான் உணவு முறையாகச் செரிமானம் அடையும்.
![உணவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10136811_thu.jpg)
கவனம் மக்களே!
- உணவு எடுத்துக் கொண்டதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இது வயிற்றில் ஏற்படுத்தும் சலனம், அங்கிருந்து முழு உடலுக்கும் ரத்த ஓட்டத்தை திசைத்திருப்பி அஜீரணம், தசைப்பிடிப்பு, வாயுப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.உடற்பயிற்சி செய்யும் முதியவர்
- குறைந்தபட்சம் உணவு உண்ட பிறகு 3 மணி நேரம் கழித்தே உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடியுமானால் 4 முதல் 5 மணி நேரம் இடைவேளை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- உடற்பயிற்சி செய்யும் முன்னும் உணவு எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது 10 முதல் 15 நிமிடங்கள் ஒவ்வொரு அமர்வுக்கும் இடைவெளி கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி முடிந்ததும் உடனடியாகச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.உணவு
- கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பைத் தவிர்க்க தண்ணீர் குடிக்கலாம். ஆனாலும் உடனடியாகத் தண்ணீர் குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தைக் குறைக்கும், ஆகவே 10 முதல் 15 நிமிடம் இடைவெளிவிட்டு குடிக்கலாம்.
உடற்பயிற்சிக்குப் பிறகு இதைச் செய்யுங்க!
![உணவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10136811_tyyyyy.jpg)
- குளிர்காலத்தில் சூடான அல்லது மிதமான சூட்டில் உள்ள உணவுகள் அல்லது பழச்சாறு குடிக்கலாம்
- மஞ்சள் கலந்த பால் அல்லது கோல்டன் மில்க் (மஞ்சள், கருப்பு மிளகு, இஞ்சி, பனைவெல்லம்) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். நீர் மோர் அருந்தலாம்.
- எலுமிச்சை சாறு, கல் உப்பு, இந்துப்பு, தேன், ஒரு சிட்டிகை மிளகு, வறுத்த சீரகம் ஆகியவற்றை கலந்து எலுமிச்சை பானம் தயாரித்து குடிக்கலாம். இது வைட்டமின் சி கிடைக்க உதவுகிறது. வியர்வையில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்து அத்தியாவசிய தாதுக்களை நமக்கு வழங்குகிறது.உடற்பயிற்சி