ETV Bharat / sukhibhava

மகத்துவம் நிறைந்த கோதுமை புல்...! - சுகி பாவா

மருத்துவ குணம் நிறைந்த கோதுமை புல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

Wheatgrass And Its Benefits
Wheatgrass And Its Benefits
author img

By

Published : Sep 4, 2020, 8:09 PM IST

ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் சமீபத்தில் ஒரு புதிய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், கோதுமை புல். வீட் கிராஸ் என்று சொல்லப்படும் கோதுமை புல்லின் தளிர்களே மருத்துவ குணம் நிறைந்த ஒரு மகத்தான தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் டிரிட்டிகம் ஏவிஸ்டம். இது போயேசே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த கோதுமை புல் வழக்கமாக சாறு வடிவில் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் தற்போது, இது தூள் வடிவத்திலும் கிடைக்கிறது.

இது குறித்து ஹைதராபாத் ஏஎம்டி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ராஜ்யலட்சுமி மாதவமிடம் பேசினோம். அப்போது பேசிய அவர், “வீட் கிராஸ் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ ஆகியவையும் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனுள் பல மகத்துவமான மருத்துவ குணங்கள் உள்ளன.

கோதுமை புல்லின் மகத்துவங்கள்...!

ரத்த சோகை

கோதுமை புல்லில் அதிக அளவு குளோரோபில் உள்ளது. அதனால்தான் அதன் சாறு ‘பச்சை ரத்தம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. வீட் கிராஸில் உள்ள குளோரோபில் நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அல்லது ஹீம் மூலக்கூறை ஒத்திருக்கிறது. அதனால்தான் இது ரத்த சோகைக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது நம் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் திறனை மேம்படுத்துகிறது.

ஆக்ஸிஜனேற்றி

இது ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு நல்ல மூலமாகும். நம் உடலில் உள்ள உயிரணுக்களுக்கு சேதம் விளைவிக்க கூடிய, ஆக்ஸிஜனுக்கேற்ற அழுத்தத்தை குறைக்கக் கூடிய ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேவைப்படுகின்றன. அந்த வேலையை கோதுமை புல் செய்கிறது. வீட் கிராஸ் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி பிற நச்சுப் பொருள்களையும் அகற்றுகிறது.

அலர்ஜி எதிர்பாளன்

எந்தவொரு காயத்திலிருந்தும் அல்லது தொற்றுநோயிலிருந்தும் நம்மை குளோரோபில் அதிகம் கொண்ட கோதுமை புல் காப்பாற்றுகிறது என்றே சொல்லலாம்.

நீரிழிவு நோய்

கோதுமை புல் ரத்ததில் உள்ள இனிப்பை கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரியந்துள்ளது. வீட் கிராஸில் உள்ள சேர்மங்கள் இன்சுலின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

கோதுமை புல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் உதவுகிறது. தீங்கு விளைவிக்கும், நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடவும், தொற்றுநோய்களிலிருந்து விரைவாக மீட்கவும் இந்த கோதுமை புல் உதவும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி கரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கும் சக்தியும் இந்த கோதுமை புல்லுக்கு உள்ளது.

இவையெல்லாம் தவிர, கோதுமை புல் கொழுப்பின் அளவை குறைக்கவும், செரிமான செயல்முறையை எளிதாக்கவும், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி கோதுமை புல் என்று சொல்லப்படுகின்ற வீட் கிராஸ் புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கோதுமை புல்லை யாரெல்லாம் எவ்வளவு உண்ணலாம்?

கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் பெண்கள் கோதுமை புல் பருகுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக 10-20 மில்லி கோதுமை சாற்றுடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்து இதை பருகலாம். இந்த சாற்றை வெறும் வயிற்றில் பருவ வேண்டும்.

இருந்தபோதிலும், இதை உட்கொள்வதற்கு முன் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றார் மருத்துவர் ராஜ்யலட்சுமி மாதவம்.

இதையும் படிங்க....தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு இருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.