ஹைதராபாத்: சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பிரச்சினை, ஏதோ பெண்களுக்கு உரித்தான பாதிப்பு தான் என்று நாம் கருதிவந்த நிலையில், இந்தப் பாதிப்பு தற்போது, ஆண்களிடையேயும் காணப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. வயது வந்த ஆண்களிடம், இந்தப் பாதிப்பு அதிகளவில் காணப்பட்டு வருகின்றன.
கவனக்குறைவு அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் பாதிப்பு கடுமையானதாக இருந்தால், கிட்னி, புரோஸ்டெட் உள்ளிட்ட சிறுநீர் பாதை தொடர்பான பிற உறுப்புகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சிறுநீரக இயல் நிபுணர் டாக்டர் ரோஹித் யாதவ் கூறியதாவது, 'ஆண்களுக்கு, இரண்டு வழிகளில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சிறுநீர்ப் பாதையின் மேற்பரப்பில், சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டால், அது சிறுநீரகம் அல்லது சிறுநீர்க்குழாயில் தொற்று அல்லது பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சிறுநீர் பாதையின் கீழ் பகுதியில், இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அது சிறுநீர்ப்பை, புரோஸ்டேட், சிறுநீர்க்குழாய் மற்றும் விந்தணுக்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர் பாதையுடன் தொடர்புடைய பிற உறுப்புகள், பாக்டீரியா நோய்த்தொற்றிற்கு உள்ளாகும் போது, செல்வாக்கின் கீழ் வரும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதாக' ரோஹித் யாதவ் தெரிவித்து உள்ளார்.
பெண்களில் சிறுநீர்க்குழாயின் நீளம் ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளதன் காரணமாக, பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சிறுநீர்ப்பையில் பாக்டீரியா விரைவாகவும் வேகமாகவும் வளரத் தொடங்குகிறது.
மறுபுறம், ஆண்களின் சிறுநீர்ப் பாதை எளிமையானது என்றபோதிலும், ஆனால் நீண்டதாக உள்ளது. இது ஆண்களில் சிறுநீரகத்திலிருந்து தொடங்கி சிறுநீர் பாதை வழியாக சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் வரை நீள்கிறது. எனவே, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, ஆண்களைப் பாதித்தால், சிறுநீர் பாதை தொடர்பான அனைத்து உறுப்புகளிலும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
ரோஹித் யாதவ் மேலும் கூறியதாவது, 'பொதுவாக, 50 வயதிற்குப் பிறகு ஆண்கள், பாலுறவு அல்லது பாதுகாப்பற்ற உடலுறவில் அதிதீவிரமாக ஈடுபடும் போது, அவர்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஆனால், இந்தப் பிரச்னை, வேறு பல காரணங்களால் இளைஞர்களிடமும் காண முடிகிறது. ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு ஈ.கோலை பாக்டீரியா தான் காரணம்.
இந்த பாக்டீரியா நம் உடலில் ஏற்கனவே இருந்தபோதிலும், சிறுநீர்க்குழாய்க்குள் நுழையும் போது, அது சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர் பாதையின் அனைத்து உறுப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகமாக இருந்தால், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் மற்றும் விந்தணுக்கள் போன்ற உறுப்புகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக' ரோஹித் தெரிவித்து உள்ளார்.
ஆண்களில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவையாவன:
- போதிய அளவிற்கு நீர் அருந்தாமை;
- நீரிழிவு பாதிப்பு;
- ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருத்தல்;
- பாதுகாப்பற்ற உடலுறவு;
- குடல் சம்பந்தமான பிரச்னைகள்;
- பாலியல் நோய்த்தொற்றுக்கள்;
- புரோஸ்டாட்டிக் ஹைபர்பிளாசியா
ஆண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்பு இருந்தால், சிறுநீர் கழித்தலில் பிரச்னை அல்லது காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் இருக்கலாம் என்று தெரிவித்து உள்ள ரோஹித் யாதவ், இந்த நோய்த்தொற்று பாதிப்பு, மற்ற உறுப்புகளையும் பாதித்து இருந்தால், வேறு சில அறிகுறிகள் காணப்படலாம் என்று குறிப்பிட்டு உள்ளார். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுப் பாதிப்பு மற்றும் அதன் காரணமாக பாதிக்கப்படும் பிற உறுப்புகளின் இயல்பான நிலைகளில் காணப்படும் அறிகுறிகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் எரிச்சல்
- அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல்
- சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
- துர்நாற்றம் வீசும் சிறுநீர்
- அடிவயிற்றில் வலி
- விந்தணுக்களில் வலி மற்றும் வீக்கம்.
- சிறுநீரில் இரத்தம்.
- சளி மற்றும் காய்ச்சல்.
- வாந்தி - குமட்டல்.
- முதுகு வலி அல்லது கைகளில் வலி.
சோர்வு உள்ளிட்டவைகள் ஆகும்.
எச்சரிக்கை: சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதை உதாசீனப்படுத்தவோ மற்றும் சுய மருத்துவம் செய்து கொள்ளவோ கூடாது, இவ்வாறு செய்தால், அது பிரச்னையின் வீரியத்தை அதிகரித்து விடும், இதன்காரணமாக, விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று, டாக்டர் ரோஹித் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுப் பாதிப்பின் விளைவுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு, இதற்கு தீர்வு காணலாம். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாட்டை கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் முக்கியம் ஆகும்.
சில நேரங்களில், பாதிப்பில் இருந்து சிறிது நிவாரணம் கிடைத்தவுடன் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுகிறோம். இது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும். இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தவிர, சில பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் உதவும் என்று ரோஹித் குறிப்பிட்டு உள்ளார்.
- குடிநீரை அதிக அளவில் அருந்துதல், இதுமட்டுமல்லாது, பழச் சாறுகள், இளநீர், எலுமிச்சைச் சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களை அதிகளவில் அருந்த வேண்டும்.
- குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும்.
- சிறுநீர் கழித்த பின்பு, அந்த இடத்தை முழுமையாக சுத்தம் செய்திடல் வேண்டும்
- இயற்கைக்கு மாறான மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்க வேண்டும்
- உடலுறவுக்குப் பிறகு தூய்மை மற்றும் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்
உள்ளிட்ட பழக்கங்களை, கடைபிடித்து சிறுநீர் பாதை நோய்த்தொற்று பாதிப்புகளைத் தவிர்ப்போம்....
இதையும் படிங்க: Bonalu festival: ஹைதராபாத்தில் 'போனாலு' திருவிழா இன்று கோலாகல துவக்கம்!