ஹைதராபாத்: ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை உலக நோய்த் தடுப்பு வாரமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பும் இணைந்து "அனைவரும் நீடூழி வாழ வேண்டும்" என்ற கருப்பொருடன், குழந்தைகளுக்கான தொடர் தடுப்பூசித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென ஏப்.25ஆம் தேதியன்று நடைபெற்ற பத்திரிகையாளர் உரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தன.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி: செம்மையான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ இன்றியமையாததாக இருக்கும் தடுப்பூசிகளின் தேவையை உணர்த்தவும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தவே "LonglifeForAll" நீடுழி வாழ எனக் குறிப்பிடப்படுகிறது #LongLifeforAll எனும் தொகுப்பு ஹேஷ்டேகை இணையத்தில் பயன்படுத்தி விழிப்புணர்வுத் தகவலை பகிர்ந்து கொள்வதோடு் இதன் தொடர்புடையத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில், வருடத்திற்கு ஏறத்தாழ 2.9 கோடி கர்ப்பிணி பெண்களுக்கும், 2.7 கோடி குழந்தைகளுக்கும் பொது நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வெளியாகியிருக்கும் தேசிய குடும்பநல ஆய்வறிக்கையின் படி 12-23 மாதங்களுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது 62 விழுக்காடுலிருந்து 76 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
உலக நோய் தடுப்பு வாரம்: சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவின் கூடுதல் ஆணையர் பேசும் போது 2022 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தீவிரப்படுத்தபட்ட இந்திராதனுஷ் பணி 4.0 தொடங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென என்ற நோக்கோடு மாவட்ட அளவிலும், பகுதியளவிலும் செயல்படுத்தி வருகிறோம்.
நெருக்கடியான சூழலில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகங்கள் ஒவ்வொரு குழந்தையும் தடுப்பூசிகள் எடுத்து கொள்ள வேண்டிய தேவையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். IMI 4.0 தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகளை தேடி கண்டறிந்து அவர்களுக்கு தேவையானதை வழங்க கவனம் செலுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார். உலக நோய்த்தடுப்பு வாரத்தின் கருவின் விளைவாக 300 ஆண்டுகளாக தடுப்பூசிகளைத் தயாரிப்பு, மேம்படுத்துதல் மற்றும் செலுத்தும் பணியில் இருக்கும் அனைவரும் இந்த உலக நோய்த் தடுப்பு வாரத்தில் நினைவு கூர்ந்து கொண்டாடப்படுவர்.
வாய்ப்பு: அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக யுனிசெஃப் ஒரு அன்பு கடித்ததை அனுப்பியுள்ளது. இந்திய யுனிசெஃப் அமைப்பின் திட்டம் வகுப்பு, தொடர்புத்துறை மற்றும் கூட்டு பங்காண்மை ஆகியவற்றின் தலைவர் ஜப்ரின் சவுத்ரி கூறும் போது "கோவிட்-19 தடுப்பூசி கொடும்நோய்களைத் தடுக்க தடுப்பூசியின் தேவைகளையும், அதன் பயன்களையும் நிகழ்காலத்தில் விவரித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசிகள் மற்றும் செலுத்திக் கொள்பவர்களின் பலத்தை காட்டியிருக்கிறது. அதே வேளையில் தடுப்பூசிகள் சேர முடியாத இடங்களில் உள்ளோர், விடுப்பட்டோர் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர இருக்கிறோம்.
வதந்திகள் கடினமானவை: உலக நோய்த் தடுப்பு வாரம், குழந்தைகளின் வளமான உடல் நலம் கூடிய எதிர்காலத்திற்கு நாம் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நமது அர்ப்பணிப்புடன் புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பாக வந்திருக்கிறது. ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இந்தச் சூழலில் ஒன்றிணைந்து பங்காற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலங்களில் சில மரணங்கள், தடுப்பூசிகளுடன் தொடர்புபடுத்தப்படுவது குறித்து ஈடிவி பாரத் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜப்ரின் சவுத்ரி, "வதந்திகள் உண்மையிலேயே கையாள கடினமானவை. எண்ணற்ற அளவில் இரைந்து காணப்படும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த யுனிசெஃப் எங்களாலான முயற்சிகளை மேற்கொள்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: பேறுகாலப் பணியாளர் பயிற்சி - இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கும் தெலங்கானா!