ETV Bharat / sukhibhava

'உறுதியான பல் வேண்டுமா?' - கொஞ்சம் இதைக் கவனிச்சு படிங்க! - வெள்ளையான பல்

நலமாக பல்லைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார், பல் மருத்துவர் ரிஷிகேஷ் கோலாபுடி.

உறுதியான பல் வேண்டுமா? -கொஞ்சம் கவனிச்சு படிச்சிட்டு போங்க!

author img

By

Published : Jul 10, 2020, 7:51 AM IST

இது குறித்து ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த ஹைதராபாத் லீலா பல் கிளினிக், பல் மருத்துவர் ரிஷிகேஷ் கோலாபுடி கூறுகையில், 'பல்லின் ஆரோக்கியம் உணவை மென்று தின்ன உதவுவது மட்டுமின்றி, இதில் ஒரு உளவியலும் அடங்கியுள்ளது. அதன்படி பார்த்தால் பற்கள் நலமாக இல்லை என்றால், மனதளவிலும் யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, பல் ஆரோக்கியமாக இல்லையென்றால், உணவு அருந்துவதில் சிரமம் ஏற்பட்டு, உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும். இதில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதனால், பல்லை நலமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்' என்றார்.

பல்லை நலமாகப் பாதுகாக்க மருத்துவர் ரிஷிகேஷ் கோலாபுடியின் பரிந்துரைகள் பின்வருமாறு:

அனைவருக்குமான அட்வைஸ் இது:

தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். காலையில் எழுந்ததும் ஒரு முறை பல் துலக்குங்கள், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு முறை பல் துலக்குங்கள். இதனால் பற்சிதைவை உண்டு பண்ணும் தேவையில்லாத பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

பல் பாழாவதற்கு சர்க்கரை மட்டும் தான் காரணமா?

சர்க்கரை பொருட்கள்தான் பல் சிதைவை ஏற்படுத்துகின்றன என மக்கள் பொதுவாக நினைப்பார்கள். ஆனால், பல் சிதைவு சர்க்கரையால் மட்டுமின்றி, பற்களில் அல்லது பல்லின் இடையில் சிக்கியுள்ள எந்த வகையான உணவுத் துகள்களாலும் ஏற்படும். அதனால் இரவிலும் பல் துலக்குவது ரொம்ப முக்கியம்.

அப்போ உணவுப் பழக்கம்?

பல் துலக்குவது, சுத்தம் செய்வது மட்டும் பல்லை ஆரோக்கியமாக வைக்காது. மாறாக, பல்லுக்கு உகந்த கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகமான உணவு, பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

பல்லை சரிவர கவனிக்க என்ன செய்ய வேண்டும்?

பால் பற்களை உடைய குழந்தைகளின் பல்லை சரிவர கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பல் வளர்ச்சி முரண்பாடு, வாயில் உள்ள எலும்பு அமைப்புத் தொடர்பான சில குறைபாடுகளை சிறுவயதிலேயே சரி செய்ய முடியும்.

நீரிழிவு நோயாளிகள் என்ன செய்யலாம்?

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி, பல்லைக் கட்டாயம் பராமரிக்க வேண்டும். ஈறுகள் சேதமடைந்தால், பற்கள் மட்டுமின்றி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதனால் பல்லை சுத்தமாக வைக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்?

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அப்போது ஈறு வீக்கம், ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும். அதனால் அப்போது பற்களை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார், பல் மருத்துவர் ரிஷிகேஷ் கோலாபுடி.

இதையும் படிங்க...பள்ளிகள் மூடல்; மதிய உணவு கட்: குப்பை சேகரித்து உணவிற்காகக் கையேந்தும் குழந்தைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.