ஹைதராபாத்: மாறும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உணவு முறையும் மாறி வருகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் துரித உணவு பழக்கத்தால் நீரிழிவு நோய், உடல் பருமன், கண் பார்வை குறைப்பாடு, இதய நோய்கள், விட்டமின் குறைபாடு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிலர், பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பதில்லை.
வருடத்தின் தொடக்கத்தில், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பேன் என்று புத்தாண்டு தீர்மானம் (Newyear Resolution) எடுத்தாலும், அதை பாதியிலேயே கைவிட்டு விடுகின்றனர். ஆறு மாதம் கூட பின்பற்றுவதில்லை. துரித உணவு பழக்கத்திற்கு அவ்வளவு அடிமையாகி விட்டோம்.
அந்த வகையில் நாம் விரும்பி உண்ணும் பீட்சா, பர்கர், பாஸ்தா போன்ற துரித உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள், மேற்கண்ட நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும் என்றால் நம்ப முடியுமா?. அதாவது துரித உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள், துரித உணவு பழக்கத்தால் வரும் நோய்களைக் கூட குணப்படுத்துமாம். அத்தகு சிறப்பு வாய்ந்த உணவுப் பொருள் தான் ஸ்வீட் கார்ன். அப்படி என்னென்ன நன்மைகள் ஸ்வீட் கார்னில் உள்ளது என்று பார்க்கலாமா.
ஸ்வீட் கார்னில் உள்ள சத்துக்கள்: ஸ்வீட் கார்னில் நமது உடலுக்குத் தேவையான நார்சத்துக்களும் தாதுக்களும் உள்ளன. ஸ்வீட் கார்னில் நார்சத்து (fibre), பொட்டாசியம், விட்டமின் பி12, போலிக் ஆசிட், மாங்கனீஸ், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் (விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9, பி12 ஆகியவற்றை விட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பர்) ஆகியன உள்ளன. மேலும் சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவை குறைவாக உள்ளன.
கண் நோய்களை குணப்படுத்தும்: ஸ்வீட் கார்னில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது மட்டுமின்றி லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், கண் நோய்களை தடுப்பதற்கு உதவுகின்றன. வயது முதிர்ச்சியால் ஏற்படும் கண் பார்வை குறைப்பாட்டை குறைப்பதற்கும் உதவுகின்றன. மேலும் கண்களின் உள்ள கரோட்டினாய்டுகள் சிதைவையும் குறைக்கின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள நார்சத்து, உடலின் செரிமானத்திற்கு உதவிபுரிந்து, மலச்சிக்கலைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மட்டுமின்றி வயிற்றுப்போக்கு பிரச்சினையையும் சரி செய்கிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின் பி மற்றும் கார்போஹைட்ரேட், இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
செல் வளர்ச்சியை மேம்படுத்தும்: ஸ்வீட் கார்னில் உள்ள விட்டமின்கள், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை உடற்செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்: ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க உதவும்: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்வீட் கார்னை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் எடை குறைப்பதற்கும் உதவுகிறது.
இதயத்தைப் பாதுகாக்கும்: ஸ்வீட் கார்னில் உள்ள பி9 இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை பாதுகாத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
முதுமையை தடுக்கும்: உடலின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முதுமையை தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து, சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்தும் உடலை பாதுகாக்கிறது. மேலும் மார்பக புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த ஸ்வீட் கார்னை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வாறு இருப்பின் ஸ்வீட் கார்னில் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டு இனிமேலாவது சாப்பிடலாம்.
இதையும் படிங்க: இனி சொத்தைப்பல் வலிக்கு வீட்டிலே தீர்வு காணலாம்!