ஐதராபாத்: மிளகின் நன்மை மற்றும் அதனில் இருக்கும் ஆரோக்கியமான பலனுக்காக பலர் மிளகை உனவில் சேர்த்து கொள்கிறார்கள். மேலும், இது எல்லா உணவின் சுவையை மேம்படுத்தும். கருப்பு மிளகில் உள்ள ஏராளமான இரசாயன கூறுகள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். ஓலியோரெசின்கள் மற்றும் பைபரின் மற்றும் சாவிசின் போன்ற ஆல்கலாய்டுகள், சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகக் கருதப்படுகின்றன. இவையெல்லாம் கருப்பு மிளகில் இருக்கும் உயிர் சத்துக்கள் ஆகும். இந்த கூறுகள் நாள்பட்ட நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
புற்றுநோயைத் தடுக்க: கருப்பு மிளகில் பைபரின் எனும் உயிர்ச்சத்து உள்ளது, இது புற்றுநோயைத் தடுக்கும். மேலும், இது மஞ்சளுடன் கலக்கும்போது அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இரட்டிப்பாகும். மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டின்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலை நோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும்: கருப்பு மிளகை பச்சையாக சாப்பிடும்போது, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் என்னும் அமிலம் வெளியிடப்படுகிறது. இது புரதங்களை உடைக்கவும் மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. குடலைச் சுத்தப்படுத்துவதோடு கூடுதலாக, ஹைட்ரோகுளோரிக் அமிலம் கூடுதல் இரைப்பை குடல் நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, உண்ணும் ஒவ்வொரு உணவைவிலும் கருப்பு மிளகுத்தூள் தெளிக்க மறக்காதீர்கள்.
சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட: மிளகின் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, சளி மற்றும் இருமலை குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி தேனுடன் மிளகை சாப்பிட்டு வந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.கூடுதலாக, இது மார்பு நெரிசலைக் குறைக்க உதவுகிறது. வெந்நீர் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெயுடன் மிளகை கலந்து அதிலிருந்து நீராவி பிடிக்கலாம். கறுப்பு மிளகில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், அது ஒரு ஆண்டிபயாடிக் ஆகவும் செயல்படுகிறது.
உடல் எடையை குறைக்க:உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுப்பதில் சிறந்தது கருப்பு மிளகு. கூடுதலாக, மிளகின் வெளிப்புற அடுக்கில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள் கொழுப்பு செல்களை உடைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. நீங்கள் மிளகு உட்கொள்ளும் போது, வியர்வை மூலமாக உடல் நச்சுகள் மற்றும் கூடுதல் தண்ணீரை வெளியேற்றும்.
இரத்த சர்க்கரையை மேம்படுத்த:பல நன்மைகளில், கருப்பு மிளகு இரத்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதை வழக்கமான உணவில் மேல் கலந்து சாப்பிடலாம். இன்சுலின் உணர்திறனைப் பொறுத்தவரை, இந்த பெரும் நன்மை தரும் மிளகை தினமும் உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.
தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு:சருமத்தின் நிறத்தை மீட்டெடுக்க சந்தையில் ஏராளமான மருந்துகள் இருந்தாலும், கருப்பு மிளகு சருமத்தின் நிறமிகள் பாதிக்கப்படுவதற்கு (pigmentation) எதிராக பாதுகாக்கிறது.மேலும், சருமத்தின் இயற்கையான நிறத்தைத் தக்கவைக்க உதவுகிறது. தினந்தோறும் கருப்பு மிளகை சாப்பிட ஆரம்பித்தால், சுருக்கங்கள் மற்றும் தோல் பிரச்சினைகள் குறையும். கூடுதலாக, இது முன்கூட்டியே முதுமை மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.
இதையும் படிங்க:International Yoga Day 2023: ஆனந்த வாழ்வு தரும் 5 ஆசனங்கள்