ETV Bharat / sukhibhava

தொற்று நோய் காலத்தில் சுயபாதுகாப்பு மட்டுமே உதவியாக இருக்கும் - பருவகால மாற்றம் தொற்றுநோய்

கரோனா வைரஸ், ஒவ்வொரு நாளும் விரும்பத்தகாத வகையில் நாடு முழுவதும் விரைவாகவும் உச்சபட்ச வேகத்திலும் பரவி வருகிறது. இப்போது பருவமழை காலம் தொடங்கியிருப்பதால், மலேரியா, ஃபைலேரியா, டெங்கு உள்ளிட்ட காற்று, தண்ணீர் மூலம் பரவும் இதர தொற்று நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இது போன்ற சமயங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

Monsoon
Monsoon
author img

By

Published : Jul 1, 2020, 6:04 PM IST

நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாலும், அவர்களை கையாளும்போதும் தங்களுக்கும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுமோ எனக் கவலை அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் இது மேலும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. பொது ஊரடங்கு காலத் தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா விரைவாகப் பரவுகிறது. இது போன்ற சமயங்களில் நமது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் வைரஸ் காய்ச்சல்களைத் தவிர்ப்பது மற்றும் இதர தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுய ஒழுக்கத்தை பின்பற்றுவது, தனிநபர் சுகாதாரம் மற்றும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஊட்ட சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியிருக்கின்றது. இவை கொசுக்கள் மற்றும் ஈக்களின் வாழ்விடங்களாக மாற வாய்ப்புள்ளது. தொட்டிகள், பூந்தொட்டிகள், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் டயர்கள், காலியாக இருக்கும் டிரம்கள், தொட்டிகள், பழைய பொருட்கள், கூலர்கள் ஆகியவற்றில் மழைத்தண்ணீர் தேங்கி நிறுப்பது அபாயமான ஒன்றாகும். இவைகளை எல்லாம் சுத்தப்படுத்தி, அவ்வப்போது தண்ணீரை வடித்து காய வைக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த ஈரப்பதமான வானிலையில், நம் கண்ணுக்குத் தெரியாமல் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். காற்று, வெளிச்சம் ஆகியவை வீட்டுக்குள் எந்தவித தடையும் இன்றி சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். வடிகால் மற்றும் கழிவு நீர் ஆகியவற்றை நிர்வகிப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காலியான தெருக்கள், காலியான நிலங்கள், வீடுகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் குப்பைகளை போட்டு வைப்பது என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், சுகாதாரமின்மை காரணமாக மக்களுக்கு கடுமையான ஆபத்தை அவை ஏற்படுத்தும். பருவமழையின் விளைவாக, இயல்பாகவே குளிரான ஈரபதமான சூழலில் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்புள்ளது.

தோல் நோய்களாலும் எளிதில் பாதிக்கப்படலாம். பருவநிலை மாற்றம் காரணமாக சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா போன்ற நீண்டகால உடல் நலக்குறைவுகள் பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் இருமல், காய்ச்சல், சளி ஆகியவற்றோடு காணப்பட்டால், அது கரோனா வைரஸ் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது முக்கியமானதாகும்.

அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் கூட பெரும்பாலானவர்களுக்கு கரோனா தொற்று பரவுகிறது என்பதால் இது முக்கியமானதாகும். அறிகுறிகள் ஆரம்ப கட்டத்திலேயே தோன்றும் பட்சத்தில், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும். மழை காலங்களில் தண்ணீர் குடிப்பது, உணவு உண்பதை விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும். நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள குடிநீரை நிச்சயம் சூடு படுத்த வேண்டும். போதுமான இடைவெளியில் ஆறவைத்து வடிகட்ட வேண்டும். அதன் பின்னரே அந்த குடிநீரை குடிக்க வேண்டும்.

வயிற்றுப் போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் கெட்டுப்போன உணவு மற்றும் தண்ணீர் மூலம்தான் பரவுகின்றன. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை சமைக்கும் முன்பு முழுமையாகக் கழுவ வேண்டும். தனிநபர் மற்றும் சமூக சுத்தம், சுய பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒழுக்கம் ஆகியவற்றை நிர்வகிப்பதுடன் கூடுதலாக குடிநீர், உணவு ஆகியவற்றில் கவனமாக இருத்தலும் முக்கியமானதாகும்.

ஒவ்வொரு முறை நீங்கள் வெளியே செல்லும்போதும் கால்கள் மற்றும் கைகளை கழுவுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாற வேண்டும். ஒன்று கூடுதல் , இரவு விருந்து நிகழ்வுகள் உள்ளிட்ட பெரும் அளவில் மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளை கொஞ்சகாலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அவசரகால சந்திப்புகள், கூடி விவாதிப்பதை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு நடத்த வேண்டும். அலுவலகங்கள் அல்லது இதர இடங்களில் நடக்கும் மீட்டிங்க்-கள், குழுகூட்டங்கள், மதிய உணவு கூட்டங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுவதைக் குறைக்கலாம். அத்தியாவசிய பொருட்கள் , காய்கறிகள் வாங்கும்போது தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அறிகுறிகளுடன் உள்ள மக்களைத் தவிர்ப்பது வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க உதவ முடியும். மருத்துவ சேவைகள், மருத்துவமனைகள் அதிக பளுவை எதிர்கொள்வதால், சுய பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம், மற்றும் சுய தனிமைப்படுத்தல் ஆகியவை வைரஸ் தொற்று பரவுவதை குறைக்கக் கூடும். வாழ்வியல் முறையிலான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சரியான நேரத்துக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான உணவு கட்டுப்பாடு ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.

சாத்தியப்பட்டால், நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள யோகா மற்றும் தியானித்தலைப் பற்றி தியானிக்கலாம். கோவிட் நோய் தொற்று கண்டறியப்பட்டால், கரோனா தொற்றை தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் குறைக்க முடியும். நம்பிக்கையுடன் மருத்துவ நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.