ஜப்பான்: புற்றுநோயை உருவாக்கும் செல்களை கண்டறியும் புதிய ஓர் முறையை டோக்கியோ மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அதை 'American chemical society’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
புற்று நோய் குறித்த அறிகுறிகளைக் கண்டறியும் இந்த வழிமுறை அதற்கான சிகிச்சை, நோயைக் கண்டறிவது, கணிப்பது போன்றவைகளுக்கு சிறந்த முறையாகும். இந்த அறிகுறிகள் புதிய விஞ்ஞான தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளில் கண்டறியப்படும்.
பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் காணப்படும் ’CTC' எனப்படும் புற்றுநோய் செல்கள், புற்று நோயாளிகளை கண்டறியப் பயன்படும் முக்கிய ஓர் கூறாகும், என இந்த ஆய்வை இயற்றிய மியுகி டபட்டா தெரிவித்துள்ளார். எனினும், இதை இரத்தத்திலிருந்து தனித்து எடுப்பது கடினமான முறையாகும்.
இந்நிலையில், இந்த 'CTC'யிலுள்ள கேன்சர் அறிகுறி செல்களை கண்டறிய புதிய கருவியான ‘ISFET'(ion sensitive field effect transisitor) எனும் கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ” ’EFGR’(Epidermal Growth Factor Receptor) எனும் மோசமான புற்று நோய் அறிகுறியை குலுகோஸ் ஆக்சிடேஸ் சிறப்பாக கண்டறிகிறது “ என மூத்த ஆய்வாளர் யூஜி மியாஹரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சைக்கு முன் கருவுறுதல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஏன்?