ETV Bharat / sukhibhava

உடல் பருமனை தடுக்கும் ஊட்டச்சத்து உணவுகள்! - ஊட்டச்சத்து உணவுகள்

கோவிட்-19 சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், உடல் பருமனை தடுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பார்க்கலாம்.

Right Nutrition Prevent Childhood Obesity Deepti Verma Childhood Obesity medical condition diet உடல் பருமன் பிரச்னை குழந்தைகளை பாதிக்கும் உடல் பருமன் ஊட்டச்சத்து உணவுகள் கோவிட்-19 நெருக்கடி

author img

By

Published : Sep 9, 2020, 7:26 PM IST

பெற்றோரின் தலைவலியை அதிகரிக்கும் பீட்சா, பர்க்கர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட துரித உணவுப் பொருள்களுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அளித்து உடல்பருமனை குறைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் உள்ளன. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனால் குழந்தைகள், இளம் பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு பின்னால் தவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மரபணு காரணிகள் உள்ளன. இதிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி வர்மா விவரிக்கிறார்.

உடல் பருமன் என்பது அவர்களின் உயரத்தை காட்டிலும் அதிகப்படியான உடல் எடையை சுமப்பதாகும். இந்தப் பிரச்னை உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக உடல்பருமனால் அவதியுறும் குழந்தைகள் நீரிழிவு நோய், இருதயக் கோளாறுகள், தைராய்டு கோளாறுகளாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பது கவலைக்குரிய விஷயம்.

இது பொதுப்பிரச்னையாக மாற தவறான உணவு பழக்க வழக்கமே காரணம். அதிலும், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித பானங்கள், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் முதன்மையாக திகழ்கின்றன.

மேலும் இன்றைய குழந்தைகள் உணவுகளை தவிர்த்து ஆன்லைனில் அதிக நேரம் கேம்கள் விளையாடுகின்றனர். மேலும், அடிப்படையில், குழந்தைகள் செரிமானத்தை விட அதிக கலோரிகளை சாப்பிடுகிறார்கள், இது அவர்களின் எடையை அதிகரிக்கிறது.

உணவில் என்ன சேர்க்கப்பட வேண்டும்?

குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் உணவு அளிக்கப்பட வேண்டும். அந்த உணவு குறிப்புகள் பின்வருமாறு:

  1. கார்போஹைட்ரேட்
  2. புரோட்டீன்

ஆரோக்கியமான உடலுக்கு டிப்ஸ்

  • அதிகாலையை சத்தான உணவுடன் தொடங்குங்கள்.
  • சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • போதுமான உடற்பயிற்சியை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  • தேவையான நேரம் தூக்கம், ஓய்வு அவசியம்.
  • பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களை கூடுமானவரை தவிர்க்கவும்.
  • இந்த விஷயத்தில் பெற்றோர் குழந்தைகளின் ரோல் மாடலாக திகழுங்கள்.
  • தட்டில் உள்ள அனைத்து உணவுப் பொருள்களையும் சாப்பிடுமாறு குழந்தைகளை வற்புறுத்த வேண்டாம்.
  • குடும்பத்துடன் உணவு சாப்பிடுங்கள். இது மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
  • சாப்பாட்டின் அளவு செரிமான திறனை அறிந்து சாப்பிடுங்கள்.

கோவிட்-19 போன்ற பெருந்தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ள நேரத்தில் ஊட்டச்சத்து விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துவது அவசியம். ஆகவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை கொடுங்கள்.

Right Nutrition Prevent Childhood Obesity Deepti Verma Childhood Obesity medical condition diet உடல் பருமன் பிரச்னை குழந்தைகளை பாதிக்கும் உடல் பருமன் ஊட்டச்சத்து உணவுகள் கோவிட்-19 நெருக்கடி
ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையான உடற்பயிற்சி

குறிப்பாக இந்த உணவுப் பொருள்கள் வீட்டில் சமைத்தவையாக இருக்கட்டும். கொழுப்பு குறைவாக உள்ள உணவுப் பொருள்களை குழந்தைகளுக்கு வழங்கலாம். மேலும், ஸ்பாட் ஜம்பிங், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.

வாசகர்களுக்கு உடல் பருமன் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நமது ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி வர்மாவை deepti.verma@vlccwellness.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிட வேண்டும்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.