ETV Bharat / sukhibhava

நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அபாயம் குறையுமா? - ஆய்வில் வெளிவந்த தகவல்!

Keeping a dog can reduce the risk of dementia: நாய்கள் வளர்ப்பதன் மூலம் மனிதனின் அறிவாற்றலை மேம்படுத்தும் மற்றும் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை 40 சதவீதம் குறைக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அபாயம் ஏற்படும் குறையும்
நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா ஏற்படும் அபாயம் குறையும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:02 AM IST

சென்னை: ஆதிமனிதன் முதன் முதலில் பழகிய விலங்கு நாய் தான். இவையே மனிதனின் சிறந்த நண்பன் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றை மனிதர்கள் செல்லப்பிராணியாக வளர்ப்பதன் மூலம் உரிமையாளர்கள் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அல்லது வயது முதிர்வால் ஏற்படும் ஞாபக மறதி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாமா என்ற ஆய்வில் இறங்கினர். உலகில் 55 மில்லியன் மக்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்ட டோக்கியோ பெருநகர முதுமையியல் தொழில்நுட்ப நிறுவனம், 12 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் நாய்களை வளர்ப்பதன் மூலம் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை 40 சதவீதம் குறைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து, மருத்துவ உளவியலாளர் மெஹெசாபின் டோர்டி கூறுகையில், "நாய்களுடனான தொடர்பு மன அழுத்தத்தைக் குறைக்கும். நாய்களுடனான நட்பு உடலைச் சுறுசுறுப்பாக்கும், சமூக தொடர்புகளை மேம்படுத்தும் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும்.

பொதுவாக நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணியான நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது, பிற நாய் உரிமையாளர்களைச் சந்தித்துப் பேசுவது போன்றவை மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். நாய்களைப் பராமரிப்பது உடலைச் சுறுசுறுப்பாக்குவதுடன், அறிவாற்றலையும் மேம்படுத்தும் டிமென்ஷியா அதாவது ஞாபக மறதி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்" என்று கூறியுள்ளார்.

மனித உடலின் உட்சூழலில் மன உளைச்சல் உண்டாகும் போது கார்ட்டிசோல் (Cortisol) என்னும் சுரப்பி சுரக்கிறது. நாய்கள் வளர்ப்பதன் மூலம் நாய்களுக்கு மனிதர்களுக்கு உண்டாகும் தொடர்பின் மூலம் கார்ட்டிசோல் சுரப்பியின் சுரப்பையும் குறைக்க முடியும். மேலும், மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் ஆக்ஸிடாசினின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க முடியும். மன அழுத்தம் இல்லாமல் சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் டிமென்ஷியா ஏற்படுவதைக் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வேகமான நடைப்பயிற்சியால் சர்க்கரை நோயால் ஏற்படும் உயிரிழப்பு குறைகிறதா? - ஆய்வு கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.