பிலடெல்பியா [அமெரிக்கா]: குழந்தை தொற்று நோய்களுக்கான ஐரோப்பிய சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு குறித்த அறிக்கை குழந்தை தொற்று நோய் இதழில் ( The Pediatric Infectious Disease Journal) வெளியாகியுள்ளது. ஆய்வின் முடிவில் உலகம் முழுவதும் அச்சுறுத்தக் கூடிய குரங்கம்மை நோய் 8 வயது மற்றும் அதற்கும் கீழுள்ள வயது குழந்தைகளிடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இதழானது வோல்டர்ஸ் க்ளூவர் லிப்பின்காட் பதிப்பகத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வினை சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபர்க் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற பெட்ரா சிம்மர்மேன் மற்றும், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நைஜெல் கர்டிஸ் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டனர்.
அதன் முடிவில் குழந்தைகளிடம் அதிகமாக பரவக் கூடிய பெரியம்மை வைரஸான ஆந்த்ராக்ஸ் வகையைச் சார்ந்ததுதான் குரங்கம்மை வைரஸ் ஆகும். எனவே இந்த குரங்கம்மை வைரஸ் குழந்தைகளிடன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
நோய் பரவல் அதிகரித்தால் மற்ற அவசர நடவடிக்கைகளுக்கான பெரியம்மை தடுப்பூசி முக்கிய இலக்காகும். இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத நிலவரப்படி, உலகளவில் 47,000 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவற்றில் 211 பேர் மட்டுமே 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். குரங்கம்மை வைரஸ் தற்போது பாலியல் ரீதியாகவோ அல்லது நெருங்கிய உறவின் மூலமாகவோ பரவுவது தெரியவந்துள்ளது. உடலின் மேற்பரப்பு தொடர்பு, வியர்வை நீர்த்துளிகள் மற்றும் அசுத்தமான பொருள்கள் போன்ற பிற பரிமாறும் வழியில் இந்த தொற்று பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு: குரங்கம்மை தொற்று என்பது பெரியம்மை தொற்றைக் காட்டிலும் குறைந்த விகிதத்தில் பரவுகிறது. இது மக்கள்தொகையில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை பிரதிபலிக்கிறது. பெரும்பாலான குரங்கம்மை தொற்று "சுய வரம்புக்குட்பட்டவையாக உள்ளது. தொற்றில் முதலில் சொறி உருவாகி 2 முதல் 4 வாரங்களில் மறைந்துவிடும். இருப்பினும் நோய் தொற்றின் அறிகுறிகள் இல்லாமை அல்லது லேசான நோயறிதல் தன்மைகளால் தொற்றை கண்டறிய தவறவிடுவதற்கும், எதிர்காலத்தில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் இவை வழிவகை செய்கிறது.
குரங்கம்மை தொற்றின் பாதிப்பு இதுவரை குழந்தைகளில் குறைவான விகிதங்களாகவே இருந்து வருகிறது. இருப்பினும் குழந்தைகளில் தொற்றின் தீவிரம் அதன் சிக்கல்கள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அதிக வருமானம் உள்ள நாடுகளில் கூட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என டாக்டர். ஜிம்மர்மேன் மற்றும் கர்டிஸ் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தரவுகளின் அடிப்படையில், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாக தீவிர பாக்டீரியா தொற்றால் அதிக ஆபத்தில் உள்ளனர். சிறு குழந்தைகளுக்கு அரிப்பு மற்றும் கண்கள் உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவுவதால் சிக்கல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அதிக பாதிப்பு: பெரும்பாலான குரங்கம்மை நோயாளிகள் சரியான பராமரிப்பால் குணமடைந்துள்ளனர். ஆனால் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அடிப்படை தோல் கோளாறுகள் உள்ளவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்படும் போது ஆபத்தின் வீரியம் அதிகரிக்கிறது. அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு கூடுதல் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள், அரிக்கும் தோல் அழற்சி உள்ளவர்கள் மற்றும் வாய், கண்கள் அல்லது பிறப்புறுப்புகளைச் சுற்றி குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி:ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் டெகோவிரிமேட் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பெரியம்மை தடுப்பூசியின் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Vaccinia Immune Globulin (VIG) ஆகியவை அதிக ஆபத்து ஏற்படுபவர்களுக்கு சிறந்த தடுப்பு மருந்தாகும். இருப்பினும் இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் மனிதர்கள் மீது குரங்கம்மை வைரஸுக்கு எதிராக பயன்படும் என நிரூபிக்கப்படவில்லை, மேலும் அவை தற்போது தேசிய சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே பரிந்துரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் நீளம் தவிர்த்து இயல்பாகவே பெரியம்மை தடுப்பூசி குரங்கம்மை தொற்றை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்த நோய் உருவான போது பெரியம்மை தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை.
குரங்கம்மை தொற்றை கட்டுபடுத்த உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதிய தடுப்பூசி(MVA-BN) ஒன்றை அங்கீகரித்துள்ளது. இருப்பினும் குழந்தைகள் மீதான இதன் விளைவு மற்றும் அதன் உரிமம் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்படவில்லை. மீண்டும் வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் குரங்கு காய்ச்சலைத் தடுக்க மருந்துகள் அல்லது தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்க "மிகக் குறைவான தரவு" மட்டுமே உள்ளது.
குரங்கம்மை குழந்தைகளிடம் அறிகுறியற்றதாக இருக்கும் பட்சத்தில், இதன் பரவும் விகிதம் அதிகரிக்கலாம். எனவே இதற்கு உடனடி நடவடிக்கையாக பெரியம்மை தடுப்பூசியை உபயோகிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
இதையும் படிங்க:சிக்கலான சிறுநீரகத்தொற்று நோய்களை குணப்படுத்த புதிய ஆன்டி பயாடிக்!