ETV Bharat / sukhibhava

பாடி மசாஜ்: தயங்குனா இதெல்லாம் மிஸ் பண்ணிடுவிங்க! - பாடி ஸ்பா

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படும் நபர்களுக்கு, பாடி மசாஜ் அல்லது பாடி ஸ்பா சிறந்த தீர்வாக அமைகிறது. அதிலிருக்கும் முக்கிய விஷயங்களை இக்கட்டுரையில் காண்போம்.

Massage
பாடி மசாஜ்
author img

By

Published : Aug 26, 2021, 11:04 AM IST

Updated : Aug 26, 2021, 11:19 AM IST

அன்றாட வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பணம் சம்பாதிக்கும் முனைப்பில் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்குக் கிடைப்பது, சோகமும் மன உளைச்சலும் மட்டும்தான். இந்தச் சூழ்நிலையில், உடலில் பாடி மசாஜ் அல்லது பாடி ஸ்பா நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

பலருக்கு பாடி மசாஜ் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், இதற்காக மசாஜ் சென்டர் செல்ல தயங்கிவருகின்றனர். அதற்குக் காரணம், பாடி மசாஜ் அல்லது ஸ்பாவால் ஏற்படும் நன்மைகளையும், அதன் செயல்முறைகளையும் அறியாததுதான்.

Massage
பாடி மசாஜ் நன்மைகள்

இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற அழகுக்கலை வல்லுநர் நந்திதா சர்மாவிடம் பேசினோம். இது தொடர்பாக அவர் விரிவாக விவரித்ததாவது:

பாடி மசாஜ் நன்மைகள்

பாடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பலனளிக்கிறது. பாடி ஸ்பா சிறந்த மருத்துவ முறையாகும். வாசனை எண்ணெய்கள் அல்லது கிரீம்களுடன் மசாஜ் செய்கையில், ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி தோல் செல்களில் அதிக ஊட்டச்சத்துகளைப் பெற உபயோகமாக அமைகிறது.

பாடி ஸ்பா தசை இறுக்கம், சோர்வைப் போக்க உதவுகிறது. அதன் காரணமாகத்தான், பெரும்பாலானோர் பாடி ஸ்பாவில் சொக்கி தன்னை மறந்து தூங்குகின்றனர். இதனால் சருமத்தில் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

Massage
பாடி ஸ்பா

முகப்பரு, வியர்க்குரு, தழும்புகள் போன்ற பல தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. பாடி ஸ்பா செய்வதால் உடலிலிருந்து இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பல நன்மைகள் உள்ளன. அவற்றைக் காண்போம்

  • மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது
  • தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது
  • மன அழுத்தம், கவலையைக் குறைக்கிறது
  • உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
    Massage
    தயங்குனா இதெல்லாம் மிஸ் பண்ணிடுவிங்க

மசாஜ் செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

பாடி மசாஜில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மசாஜிலும் வித்தியாசமான நன்மைகள் உள்ளன. பயன்படுத்தப்படும் பொருள்கள், தயாரிப்புகள் மாறுபடும்.

எனவே மசாஜ் சென்டருக்கு செல்வதற்கு முன்பு, சிகிச்சை முறைகள், மசாஜ்கள் வகைகள், ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் குறித்த தகவலை அறிந்துகொள்ள வேண்டும். இதுமட்டுமின்றி பல விஷயங்கள் உள்ளன. அவற்றைக் காண்போம்

Massage
ஆயில் மாசாஜ்
  • ஸ்பா, சலூனுக்கு செல்வதற்கு முன், அதைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற வேண்டும்
  • உங்களுக்குத் தேவையான மசாஜ் முறையைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  • மசாஜ் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குளிப்பது கூடுதல் நன்மை
  • மசாஜ் செய்வதற்கு முன்பு குறைந்தது 1-2 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக் கூடாது
  • மசாஜ் செய்வதற்கு முன்பு உங்களது ஒவ்வாமை குறித்து மசாஜ் செய்பவரிடம் கண்டிப்பாகக் கூற வேண்டும்.

ஏனென்றால், சிலருக்கு குறிப்பிட்ட லோஷன், மாய்ஸ்சரைசர் அல்லது எண்ணெய் ஒவ்வாமை இருக்கலாம். எனவே, மசாஜ் செய்பவருக்கு இது தெரிவது அவசியமாகும்.

இதையும் படிங்க: உடலுறவுக்கு பிறகு ஹேப்பியா தூங்குவது ஆண்களா, பெண்களா?

Last Updated : Aug 26, 2021, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.