குளுக்கோமா கண்ணின் நரம்புரக்கு சேதம் விளைவித்து கண்பார்வை குறைபாடை ஏற்படுத்துவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விவரித்துள்ளது. கண்களுக்குள் திரவ அழுத்தம் அதிகரிக்கும்போது. குளுக்கோமா ஏற்படுகிறது. சாதாரண கண் அழுத்தம் காரணமாகக்கூட குளுக்கோமா ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
7 முதல் 13 மார்ச் வரை உலக குளுக்கோமா வாரத்தை நாம் கொண்டாடுகிறோம். இதுகுறித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க...
குளுக்கோமா குறித்து விஎன்என் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் வுக்கலா கூறுகையில், "குளுக்கோமா கண்ணுக்குள் அதிகரித்துவரும் அழுத்தம் காரணமாக உருவாகிறது. கண்களுக்குள் இருக்கும் ரத்தநாளங்களில் அடைப்பு காரணமாக கண்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. கண்களுக்குள் எப்போதும் திரவத்தின் சுழற்சி இருந்து கொண்டே இருக்கும். இதில் தடை ஏற்பட்டால் அழுத்தம் உருவாகி கண்களில் அழுத்தம் ஏற்படுகிறது இதன் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுகிறது." என்றார்.
இதுகுறித்து மருத்துவர் ரங்கநாயக்குலுவுடன் பேசுகையில், "காயம், விபத்து, அதிர்ச்சி, தொற்று, பரம்பரை, கண் அறுவை சிகிச்சை போன்ற காரணிகளால் குளுக்கோமா ஏற்படக்கூடும். நமது கண் அதன் இயல்பான உள் அழுத்தத்தை பராமரிக்காதபோது, அதாவது உயர் உள்விழி அழுத்தத்தை (High Intraocular Pressure- IOP) பார்வை நரம்பில் சுருக்கம் ஏற்படுகிறது. இதுவே குளுகோமாவை ஏற்படுத்துகிறது". என்றார்.
குளுக்கோமாவின் அறிகுறிகள்:
- கண்களில் வலி மற்றும் தலைவலி
- கண்களில் அரிப்பு மற்றும் திரவ வெளியேற்றம்
- பார்வை இழப்பு
மருத்துவர் ராஜேஷ் வுக்கலா கூறுகையில் கண்ணில் அழுத்தம் குறித்து எந்த பரிசோதனையும் மேற்கொள்ளாத நிலையில், குளுக்கோமா குறித்த அறிகுறிகள் எதுவும் நமக்கு தென்படாது. கண்களில் குளுக்கோமா இருப்பது தாமதமாக அறியப்பட்டால் அது நரம்பு பாதிப்பை ஏற்படுத்தி பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
குளுக்கோமாவுக்கு கவனமான சிகிச்சை தேவை. ஏனென்றால் அறுவை சிகிச்சை, நிலைமையை மோசமாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆயுர்வேத நிபுணர்கள் சிகிச்சை முறையை பரிந்துரைக்கின்றனர். இது வெனிஷெக்சன் என்றும் அழைக்கப்படுகிறது.
"இது சுய சிகிச்சை செய்து கொள்வதற்கான நோய் கிடையாது. இதற்கு நிபுணர்களின் ஆலோசனை அவசியம். ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னதாக, நிபுணரின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெற வேண்டும்." என்கிறார் மருத்துவர் ரங்கநாயகுலு.
கண்களுக்கு ஓய்வு அளித்து ஒளிரும் பொருள்களை காண்பதை தவிர்க்க வேண்டும். பொது சுகாதாரத்தை கவனித்துக் கொள்வதில் குளுக்கோமா நோயில் இருந்து மீளலாம்.
நவீன மருத்துவத்தின்படி குளுக்கோமாவை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் அதை கண் சொட்டு மருந்துகளால் சரிசெய்யலாம். ஆனால் குளுக்கோமா ஆரம்ப கட்டத்தை தாண்டி சென்றால், அறுவை சிகிச்சையின் மூலம் கண்ணில் இருக்கும் திரவத்தை வெளியேற்றுவார்கள். நிலை இன்னும் மோசமானால், கண் பார்வையை இழக்க நேரிடும். இதனால் அனைவரும் கண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: முதுமையில் கொல்லும் தனிமை: வயதானவர்களை கவனித்துக்கொள்ளுவது ஏன் முக்கியம்?