ETV Bharat / sukhibhava

கர்பிணிகளுக்கான ட்யட் பற்றி தெரியுமா?... ஆரோக்கியமான குழந்தை பிறக்க இத ஃபாலோ பண்ணுங்க! - health tipS

Pregnancy Diet Tips in Tamil: ஆரோக்கியமான குழந்தைப் பிறக்க தாய்மார்கள் எந்ததெந்த உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.

கர்பிணிகளுக்கான ட்யட் பற்றி பார்க்கலாம்
கர்பிணிகளுக்கான ட்யட் பற்றி பார்க்கலாம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 6:58 PM IST

சென்னை: தாய்மை என்பது ஒரு இனிமையான உணர்வு. பெண்ணிற்கு ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு போன்றது. இந்த நேரத்தில தான் நீ ரொம்ப கவனமாக இருக்கனும், கண்டதையெல்லாம் சாப்பிடக்கூடாது, நீ ஒரு உயிர் இல்ல, ரெண்டு உயிர். இரண்டு உயிருக்கும் சேர்த்து தான் சாப்பிடனும் என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். அப்படியான வேளையில் கர்பிணிகள் உணவு கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மாறிவரும் காலச்சூழல் மற்றும் நவீன உணவுமுறை ஆகியவற்றால் தற்போது, சுகப்பிரசவங்களும் அரிதாகிவிட்டன. ஆரோக்கியமான குழந்தை பிறப்பு அரிதாகிவிட்டன. வயிற்றில் உள்ள குழந்தைக்கும், தாயின் நலத்திற்கும் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இப்போது கர்ப்பக்காலத்தில் பெண்கள் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஜிங்க் நிறைந்த உணவுகள்: வயிற்றில் குழந்தை சத்தாக வளர்வதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது. கர்பிணிகள் ஒரு நாளைக்கு தனது உணவில் 12 மில்லி கிராம் அளவிலான ஜிங்க்கை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்போது ஜிங்க் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

பாதாம் பருப்பு (Almonds): ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 0.9 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாமை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பாதாமை காலையில் சாப்பிடலாம்.

முந்திரி பருப்பு (Cashews): ஒரு அவுன்ஸ் முந்திரி பருப்பில் 1.6 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. முந்திரியில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் செம்பு, மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவற்றை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

எள் விதைகள் (Sesame Seeds): ஒரு அவுன்ஸ் எள் விதையில் 0.7 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. எள் விதைகளில் கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவற்றை சாலட்களில் கலந்து சாப்பிடலாம். எள் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் தாய்மார்களுக்கும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

சூரிய காந்தி விதைகள் (Sunflower Seeds): ஒரு அவுன்ஸ் சூரிய காந்தி விதையில் 1.5 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. அதிக சத்துள்ள சூரிய காந்தி விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நெஞ்செரிச்சலையும் குறைக்கின்றன.

பனீர் (Paneer): ஒரு அவுன்ஸ் பன்னீரில் 1.28 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு பன்னீர் சிறந்த உணவு. புரதச்சத்து மிகுந்த பன்னீர், பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பன்னீரை விரும்பும் வகையில் சமைத்து சாப்பிடலாம்.

தண்டுக்கீரை (Amaranth): ஒரு அவுன்ஸ் தண்டுக்கீரை விதைகளில் 0.86 மில்லி கிராம் அளவிலான ஜிங்க் உள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம், மாங்கனீஸ், இரும்பு, மெக்னீசியம் போன்றவை உள்ளன. மற்ற கீரைகளைப் போல தண்டுக்கீரையையும் சமைத்து சாப்பிடலாம். தண்டுக்கீரை கர்பிணிகளுக்கு மிகவும் நல்லது.

ஜிங்க்-யின் நன்மைகள்: உடலில் உள்ள அனைத்து நொதிகளும் சரியாக வேலை செய்வதற்கு உதவுகிறது. உண்ணும் உணவு எளிதில் ஜீரணமடைய உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள திசுக்கள் நன்றாக வளர உதவுகிறது. உடல் உறுப்புகளில் எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மருத்துவரின் ஆலோசனையின் படி சரியான அளவு ஜிங்க்கை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம்.

இதையும் படிங்க: விட்டமின் டி அதிகமாக இருந்தால் மார்பக புற்றுநோய் வராதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.