ETV Bharat / sukhibhava

வெள்ள பாதிப்பா... இதைச் செய்ய மறந்துராதீங்க! சென்னை மக்களே உங்களுக்குத் தான்! - வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன

Measures to maintain in Rain Season: வெள்ள பாதிப்பு நேரங்களில் நாம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:17 PM IST

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பிக் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகு கடினமான தருணங்களில் நாம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

  • மழையின் வெள்ளம் ஏற்படும் போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். ஆகையினால் மெழுகுவர்த்தி, டார்ச் லைட் போன்றவற்றை முன்கூட்டியே எடுத்து வைப்பது தக்க சமயத்தில் உதவும்.
  • எலக்ட்ரானிக் பொருட்களான செல்போன், இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றைப் பாதுகாக்க, நீர்ப்புக்கா கவரினுள் போட்டு, பயன்படுத்துவது நல்லது.
  • அதீத மழையின் போதும், வெள்ள பாதிப்பின் போதும், சற்று குளிரும். ஆகையால் போர்வை மற்றும் கம்பளி ஆடைகள் போன்றவற்றை முன்கூட்டியே எடுத்து வைக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும் என்பதால் சூப் மற்றும் கசாயம் செய்து குடிப்பது நல்லது. ஆனால் மழையின் போது அடிக்கடி கடைக்குச் செல்ல முடியாததால் சூப் மற்றும் கசாயம் செய்வதற்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைப்பது சிறந்தது.
  • மழைக்காலத்தில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வீடுகளில் கொசு வலைகளை அமைப்பது சிறந்தது. இது டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் உருவாகும் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.நீர் புகாதவாறு உள்ள காலணிகள், கையுறை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
  • வீட்டிலோ அல்லது வீட்டிற்கு அருகிலோ மழைநீர் தேங்கும் பட்சத்தில்., வீட்டிற்குள் பூச்சி நுழைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.
  • கழிவுநீர் குழாய் இணைப்புகளில் உள்ள நீர் பின்புறமாகப் பாயாமல் இருக்க வால்வுகளை மூடச் செய்ய வேண்டும்.
  • நீரைச் சுத்தம் செய்ய உதவும் குளோரின் அல்லது அயோடின் வில்லைகள் வீட்டில் முன்கூட்டியே வாங்கி வைத்திருப்பது நல்லது. ஒரு வேளை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும் போது குளோரினை பயன்படுத்தி நீரினை சுத்தம் செய்யலாம்.
  • வீட்டில் சமையல் எரிவாயு இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்.
  • வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழும் போது, வீட்டில் சமைக்க இயலாது. ஆகையால் கோதுமை பிரட், ஜாம் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் ஏரி, குளம், வடிகால் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எனில், வீடுகளில் நீர் உறிஞ்சும் கருவிகளை வைத்திருத்தல் வேண்டும்.
  • எலட்ரானிக் பொருட்களான ஃபிரிட்ஜ், டிவி, மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றையும், உங்களுக்குத் தேவையான உடைமைகள் அதாவது உடை, கம்பளி, போர்வை போன்றவற்றைத் தண்ணீரில் நனையாதவாறு உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
  • உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் அறுந்து கிடந்தால், அவற்றை உடனடியாக அகற்றக்கோரி, மின்சாரத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • தேங்கும் மழைநீரால் பல்வேறு நோய்ப் பாதிப்புகள், பூச்சிகளின் தாக்குதல் போன்றவை நிகழும். ஆகையால் முதலுதவி பெட்டியை வைத்திருப்பது நல்லது.
  • உங்களிடம் வீட்டு விலங்குகள் இருப்பின், அவற்றைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வது கட்டாயம்.
  • வீட்டில் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடைமைகளை முன்கூட்டியே எடுத்து வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கிறதா? - கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறும் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.