ETV Bharat / sukhibhava

கோவிட் - 19: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - சுகிபவா

குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பவைகள் குறித்து சிறப்பான புரிதலுடனேயே இருக்கிறார்கள். கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளிலும் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில் குழந்தைகளுக்கான கோவிட் 19 பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நாம் கூடுதல் கவனம் கொள்வது அவசியமாகிறது.

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
author img

By

Published : Jul 1, 2021, 7:03 PM IST

கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில், மூன்றாம் அலை குறித்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. இம்முறை குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குழந்தைகளுக்கான கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து, கோவா மாநிலம், மார்காவ் நகரத்தில் உள்ள 'ஹாஸ்பிசியோ மருத்துவமனை'யின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர், கோவிட் தடுப்பு குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ஈரா அல்மைடா ஈடிவி பாரத் சுகிபவா குழுவுடன் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடினார்.

"சுயசிந்தனையுடன் செயல்பட முடியாத, 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க நாங்கள் பரிந்துரைப்பதில்லை. அவைகள் சலவை செய்யப்படாததால் அதிகம் மாசு அடைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு முககவசம் அணியும் பகுதிகளில் அலர்ஜி ஏற்படுகின்றது.

ஐந்து வயதிற்கு மேல் 18 வயது வரையுள்ளவர்கள் பெருந்தொற்று காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றத்தரும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். குழந்தைகள் விரைவாக கற்றுக் கொள்ளக்கூடியவர்கள். அவர்களுக்கு புரியாது என நாம் அவர்களைப் புறந்தள்ளக்கூடாது.

பொம்மைகளை கவனியுங்கள்

குழந்தைகளுக்கான உற்ற தோழர்களாக அவர்களுடைய பொம்மைகளே இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய பொம்மைகளை விட்டுப் பிரியாதிருக்கவே விரும்புகிறார்கள். பொம்மைகளில் எப்படி கிருமிநாசியைப் பயன்படுத்துவது என பெற்றோர் அடிக்கடி கேட்கிறார்கள். தினமும் ஒரு முறை சுத்தமான சோப்பு நீரைக் கொண்டு பொம்மைகளை கழுவினாலே போதும், பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

பாதுகாப்பான இடத்தில் விளையாட்டு

அடைக்கப்பட்ட காற்றோற்றம் இல்லாத இடத்தில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம். அவைகள் நோய்க்கிருமிகளை ஈர்க்கும் இடங்களாக இருக்கலாம். குழந்தைகள் விளையாடும் இடம் நல்ல காற்றோட்டமாக இருப்பதை பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டும். திறந்த ஜன்னல்களையுடைய, காற்று வெளியேறும் தன்மையுள்ள அறைகளில் குழந்தைகளை விளையாட விடலாம்.

தொற்று பாதித்தவர்களிடம் தள்ளியிருத்தல்

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பொற்றோர் பலர் இரவு நேரங்களில் தங்களின் குழந்தைகளுடனேயே உறங்குகின்றனர். இது மிகப் பெரிய அச்சுறுத்தல். தங்களுடைய குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ள தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர், குழந்தைகளுடன் இருக்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இரவில் உறங்கும் போது குழந்தைகளிடமிருந்து தனித்து வேறு அறையில் உறங்கலாம். இதனால் தொற்று பாதித்தவர்களுடன் இருக்கும் நேரமும், நோய்க் கிருமி பாதிக்கும் அபாயமும் குறையும்.

குழந்தைகளுக்கான வைட்டமின் மாத்திரைகள்

அதே போல, ஆவி பிடிப்பதன் மூலம் பெரும் மாற்றம் நிகழ்ந்து விடுவதாக பல பெற்றோர் நம்புகிறார்கள். தற்போதைய கோவிட் 19 தொற்று நடைமுறை அனுபவம் மூலமாக, தொடர்ந்து ஆவி பிடிப்பது, சுவாசப்பாதையை பாதிப்படையச் செய்கிறது என்பதை நாம் அறிவோம். குழந்தைகளை குளிக்க வைக்கும் போது நாம் கடைபிடிக்கும் நடைமுறைகளே சுவாசப்பாதையை சுத்தமாக்க போதுமானது.

குழந்தைகளுக்கான வைட்டமின்களைப் பொறுத்தவரை, ஒரே இரவில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி விட முடியாது என்பதை பெற்றோர் உணர வேண்டும். தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர், உடனடியாக விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது அவர், அடுத்த நொடியே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் போகிறார் என்று அர்த்தம் கிடையாது; அப்படி செய்யவும் முடியாது. நோய் குணமாகும் போது நீங்கள் கொஞ்சம் நோய் எதிர்ப்பு சக்தியை பெற மட்டுமே முடியும்.

எனவே நோயின் கடுமையான கட்டம் முடிந்ததும், குழந்தை நலமருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் மாத்திரைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஜிங் மாத்திரைகள் மாத்திரைகள் கசப்பான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் அதனை விரும்ப மாட்டார்கள்; அது அவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். அதனால் வைட்டமின் மாத்திரைகளில் கவனம் செலுத்துவதை விட, காய்ச்சலைக் குறைப்பதற்கான நோய் எதிர்ப்பு வழிமுறைகள், தேவைப்படும் மாற்று சிகிச்சைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான உணவே சிறந்தது

வைட்டமின் மாத்திரைகளை, தொற்று ஏற்படுவதற்கு முன்பு கொடுக்கலாம். தொடர்ந்து தரும் போது, ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்; ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடமுடியாது.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியும்போது செய்யவேண்டியவை; செய்யக்கூடாதவை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.