ETV Bharat / sukhibhava

தீபாவளி 2023: எண்ணெய் குளியலா.? இந்த விஷயங்கள கவனத்துல வச்சுக்கோங்க.! - Applying oil to the head and taking a bath

தீபாவளி நாட்களில் நம் வீடுகளில் கொண்டாட்டம் கலைக் கட்டும் மறு பக்கம் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த எண்ணெய் குளியலை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 3:34 PM IST

சென்னை: தீபாவளி நாட்களில் காலையில் எழுந்து எண்ணெய் குளியல் மேற்கொள்வார்கள். இதற்குப் புராண ரீதியாக, பவுத்த ரீதியாக, சமண ரீதியாக, அறிவியல் ரீதியாக எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவரவர் அவர்களுக்கே உரித்தான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை மேற்கொள்கின்றனர். எது எப்படியோ அனைத்திலும் பொதுவாக எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது. இந்த எண்ணெய் குளியலை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

எண்ணெய் குளியல் நலன்கள்: எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டால் உடல் சூடு தனியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த குளியல் காரணமாக உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பல சுரப்பிகள் சுரப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. அறிவியல் ஆய்வாளர்கள் இதைப் பல ஆண்டுகளாக நம்பவில்லை. ஆனால் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எண்ணெய் குளியல் எடுப்பதன் காரணமாக, உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் அனைத்தும் குறைந்து நிம்மதியான தூக்கமும், மன அமைதியும் கிடைக்கிறது.

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும்: தீபாவளி பண்டிகையின்போது தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிப்பது மரபு. இந்த எண்ணெயை தலைக்கு மட்டும் வைத்துக் குளிக்கக்கூடாது. உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து 30 நிமிடங்கள் முதல் சுமார் 1 மணி நேரம் வரை ஊரவைத்துக் குளிக்க வேண்டும். முதலில், கால்களில் தண்ணீர் ஊற்றி படிப்படியாக உடல் முழுவதும் நனைத்து, கடைசியில் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இப்படிக் குளிக்கும்போது உடலில் உள்ள சூடு காது, கண், மூக்கு வழியாக வெளியேறும்.

எந்த எண்ணெய்யில் குளியல் எடுத்தால் நல்லது: நல்லெண்ணெய் குளியல் உடலுக்கு மிகுந்த நலன் தரும் என மருத்து ரீதியாகச் சொல்லப்படுகிறது. அது தவிரத் தேங்காய் எண்ணையும் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

எந்த நேரத்தில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்: காலை 5 மணிக்கு எழுந்து தலை மற்றும் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 5.30 மற்றும் 6 மணிக்குள் குளித்துவிடுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதைத் தீபாவளி பண்டிகை மட்டும் இன்றி உங்கள் அன்றாட வாழ்விலும் வாரம் இரண்டு முறை இப்படி குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்.

உடல் நலன் பாதிக்குமோ என்ற அச்சம் உள்ளதா? சளி பிடித்துவிடுமோ என்ற அச்சம் உள்ளவர்கள், எண்ணெய்யைக் கொஞ்சம் அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் கொஞ்சம் அரிசி, வெந்தையம் மற்றும் மிளகு போட்டு பொரியவிட்டு, அந்த எண்ணெய்யைத் தலை மற்றும் உடலில் தேய்க்கும் பாகத்தில் ஆற வைத்து, தேய்த்துக்குளிக்கலாம். மேலும், வெதுவெதுப்பான சூடான நீரில் குளிக்கலாம். எந்த தொந்தரவும் வராது என்ற உறுதி உள்ளவர்கள் சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது.

இதையும் படிங்க: அரிசி சாப்பாட்டுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமே இல்ல: நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.