ETV Bharat / sukhibhava

உறக்கத்தில் மரணம்: உடல் பருமனால் ஆபத்து! - தூக்கத்தில் மூச்சுத் திணறல் என்றால் என்ன

டிஸ்கோ மன்னன் பப்பி லஹிரியின் மறைவுக்குப் பிறகு திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. பப்பி டா பிப்ரவரி 15 அன்று இரவு காலமானார். இவரது மறைவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) காரணம் என்று கருதப்படுகிறது. இதனைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் பார்க்கலாம்!

உறக்கத்தில் மரணம்
உறக்கத்தில் மரணம்
author img

By

Published : Feb 17, 2022, 10:53 PM IST

Updated : Feb 18, 2022, 2:26 PM IST

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது ஒரு கோளாறு ஆகும், இதனால் நீங்கள் தூங்கும்போது சுவாசப் பாதைகளில் தடை ஏற்படுகின்றது அல்லது மூக்கு அடைத்துவிடுகிறது, சில சமயங்களில் குறட்டைகள் ஏற்படும்.

சத்தமில்லாத தூக்கம் அதன் அறிகுறியாகும், இதனால் பாதிக்கப்படும் நபர் அவரது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்நபர் உடல் நிறை குறியீட்டெண்ணை (BMI) சிறந்த அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஹைதராபாத்தில் உள்ள வி.ஐ.என்.என். மருத்துவமனையின் ஆலோசனை மருத்துவர் ராஜேஷ் வுக்கலாவிடம், இந்த விஷயம் குறித்து நாம் கேட்டோம், அதற்கு அவர், "நாம் சுவாசிக்கும்போதும், காற்றை வெளிவிடும்போதும் ஆக்சிஜன் (O2), கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவற்றின் அளவு பொருந்தி இருக்க வேண்டும்.

ஆனால் தூக்கத்தில் மூச்சுத் திணறலின்போது, சைனஸ், மூக்கு, கழுத்துப் பகுதிகளில் பொருந்தி இருக்காது.

இதன் அறிகுறிகள் என்ன?

  • குறட்டையின் அளவு அதிகரித்தல்
  • ஓய்வே இல்லாததுபோல சோர்வாக இருத்தல்
  • லேசான தலைவலி
  • கவனக்குறைவு
  • நாள்பட்ட சோர்வு
  • அன்றாடச் செயல்பாடுகளைச் செய்ய இயலாமை
  • மூச்சுத் திணறல் அல்லது திடீர் விழிப்பு
  • சுவாசிக்க அதிகக் காற்றை உள்ளிழுக்க சிரமம்
  • அழுத்தம்

இதில் பெரும்பாலானவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், ஹைப்போ தைராய்டிசம் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளை உருவாக்கும் ஆபத்தில் உள்ளனர்.

மிக மோசமான சூழல் என்னவென்றால், உடலில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் பொருந்தாத தன்மை காரணமாக, முக்கிய உறுப்புகள், மூளை, இருதயம், நுரையீரல்கள் பாதிக்கப்படலாம்" என எச்சரிக்கிறார்.

ஆபத்துக் காரணிகள்

  • உடல் பருமன்
  • பெரிய கழுத்து (17 அங்குலத்திற்கு மேல்)
  • உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 25-க்கு மேல் இருத்தல்
  • சுவாசிப்பதில் மிகச் சிரமமாக உணருதல் (Deviated Nasal Septum)
  • ஒவ்வாமை
  • சைனசிடிஸ் (Sinusitis)
  • ஆஸ்துமா

நோயைக் கண்டறிதல்

உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஒரு தூக்க ஆய்வு மூலம் கண்டறிய முடியும், மருத்துவ ரீதியாக பாலிசோம்னோகிராபி என்று குறிப்பிடப்படுகிறது.

வீடு, மருத்துவமனை அல்லது ஆய்வகத்தில் இயந்திரம் பொருத்தப்பட்டு, அந்த நபரின் தூக்கம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. நபர் தூங்கும்போது, குறிப்பிடப்பட்ட அளவுருக்கள்:

  • அந்நபர் எப்படி சுவாசிக்கிறார்?
  • ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு பரிமாறப்படுகிறது?
  • இருதயம் எப்படி துடிக்கிறது?
  • ரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது?

எனவே, இந்த அளவுருக்கள் அனைத்தும் ஆய்வுசெய்யப்படுகின்றன. மூச்சுத்திணறல் குறியீட்டின் மற்றொரு விஷயம் என்னவென்றால், இது ஒரு நபர் சுவாசத்தை எத்தனை முறை நிறுத்தினார் என்பதையும் கூறுகிறது.

இந்தக் குறியீட்டின்படி, அதன் அளவு 6.5 வரை இருந்தால் இயல்பானது. இதன் அளவானது அதிகமாக இருந்தால் உறக்கத்தில் மூச்சுத் திணறல் நோய்க்கான அறிகுறியைக் காட்டும்.

இதனை எவ்வாறு கையாளுவது?

பாதிக்கப்பட்ட நபர் காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். நாசி விலகல் (nasal deviation) இருந்தால், அவர்கள் அதை சரிசெய்து கொள்ள வேண்டும், அதிக பிஎம்ஐ இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். ஆனால், நபர் வயதானவராக இருந்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மேலும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், பிராணாயாமம், யோகா அல்லது ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தல், உறங்கும் நிலையை மாற்றி நடைப்பயிற்சி மேற்கொள்வது, சரியான காற்றோட்டத்தை உறுதிசெய்தல் போன்ற பிற வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதையும் படிங்க: ஒரு சிறிய கிராம்பில் இவ்வளவு நன்மைகளா?

Last Updated : Feb 18, 2022, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.