உலகில் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது பெரும்பாலும் பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய இதயவியல் சங்கம் தனது இதழில், “ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் கொண்ட கருத்தடை மாத்திரைகளை பருமனான பெண்கள் உட்கொள்ளும்போது நரம்புகளில் ரத்த கட்டிகளை உண்டாக்கும் சிரை திரம்போம்போலிசம் (Venous ThromboEmbolism - VTE) என்ற நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தாத பருமனான் பெண்களுடன் ஒப்பிடும்போது, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பருமனான பெண்களுக்கு 24 மடங்கு பாதிப்புள்ளது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எட்டு வைத்து நடத்தால் எட்டிப்போகும் கேன்சர்... ஆய்வில் புதிய தகவல்..