உங்களுக்கு டைப் 1 நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தால், இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த கார்போஹைட்ரேட் எண்ணிக்கை மிகவும் முக்கியமாக தேவைப்படும். அவற்றின் மூலம் தேவையான கார்பஸ் அளவை கண்டறிந்து அதற்கேற்ப சாப்பிட முடியும். அதே சமயம், உங்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு இருந்தால், உடல் எடையை குறைக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம். எந்த வகையாக இருந்தாலும் சரி, சாப்பிடும் அளவு முக்கியமானது. கார்ப்ஸ் எண்ணிக்கையை கணக்கிடுவதன் மூலம் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய முடியும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்:
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, அரிசி, முழு தானிய ரொட்டி, முழு தானிய பாஸ்தா, பக்வீட், குயினோவா, திணை, ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதே சமயம், நார்ச்சத்து குறைவாக உள்ள வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கிரீன் இலை காய்கறிகள்:
பச்சை இலை காய்கறிகளான முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலே, கீரை போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை ரத்த அளவை கட்டுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
முழு பழங்கள்
சிட்ரஸ் பழங்கள், பேரிக்காய், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்ற முழு பழங்கள் உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வு ஆகும். பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை மிகவும் நல்லது எனக் கூறப்படுகிறது.
ஹை புரோடின்ஸ், ஆரோக்கியமான கொழுப்புக்கள்:
கொட்டைகள், விதைகள், ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய்கள், ஆளிவிதை அல்லது வெண்ணெய் போன்றவற்றிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகளும், முட்டை, பீன்ஸ், குறைந்த கொழுப்புள்ள பால், ஒல்லியான இறைச்சிகள் மற்றும் இனிக்காத தயிர் போன்றவற்றிலிருந்து உயர்தர புரோடின்ஸ் கிடைக்கிறது.
கவரில் விற்பனை செய்யப்படும் பொருள்களை தவிர்ப்பது நல்லது. அதே போல், சர்க்கரை அளவு குறைவாக உள்ள பொருள்களை சாப்பிட வேண்டும். சர்க்கரை அதிகளவில் உள்ள எனர்ஜி ஜூஸ், காபி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
நிறைய உப்பு சாப்பிடுவதால் உங்கள் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இது கூடுதல் பிரச்னையாக இருக்கக்கூடும்.
சிற்றுண்டி
பிஸ்கட், சாக்லேட்டுகளுக்கு பதிலாக தயிர், உப்பு சேர்க்காத கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
ஆல்கஹால்
மிதமான அளவில் ஆல்கஹால் குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்துகள் ஏற்படாது. ஆனால், இன்சுலின் பயன்படுத்துபவர்களுக்கு ஆல்கஹால் குடிப்பது இரத்தச் சர்க்கரைக் குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சி உங்கள் எடையை நிர்வகிக்க உதவுகிறது. ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுவதோடு, இதய பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
அதிகளவில் தண்ணீர் குடிப்பதும், சமையலில் இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் சேர்ப்பதும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும், ஆய்வின்படி, பிட்டர் கவுட் (கரேலா) ஜூஸ் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.