நியூயார்க்: சிக்கலான சிறுநீரகத்தொற்று நோய்களுக்கு பழைய சிகிச்சைகளுக்கு மாற்றாக ஓர் புதிய மருந்து ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'ALLIUM phase 3'-யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தாங்கள் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனின் பத்திரிகையில்(JAMA) வெளியிட்டனர். அதில், சிறுநீரகத்தொற்று நோய்களையும், குடலை எரிக்கும் (Acute pyelonephritis) நோயையும் குணப்படுத்த பைபராசிலின் மற்றும் தாசோபாக்டமை விட செஃபெபைம் மற்றும் என்மெடசோபாக்டம் வெற்றிகரமாக குணப்படுத்துவதாக விவரித்திருந்தனர்.
இதுகுறித்து ரட்ஜர்ஸ் ராபர்ட் வுட் ஜான்சன் மருத்துவப்பள்ளியில் பேராசிரியரான கெய்த் கேய் கூறுகையில், 'சிறுநீரகம் சார்ந்த நோய்களில் காய்ச்சல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், போன்றவைகளால் அச்சிறுநீரக நோய் மேலும் சிக்கலாக மாறும். அப்போது இந்தப்புதிய வகை 'ஆன்டி பயாடிக்' மருந்து அதை குணப்படுத்தப் பயன்படும். பெனிசிலின், செபலோஸ்போரின்ஸ் போன்ற பல ஆன்டி பயாடிக் மருந்துகள் தொற்றுநோய்களை குணப்படுத்த பயன்படும். ஆனால், அவை யாவும் ‘ESBL'(Extended Spectrum Beta-Lactamose) உற்பத்தி செய்யும் பாக்டீரியா கிருமிகளை எதிர்த்துசெயல்படாது.
நாங்கள் 'ESBL' போன்ற தகர்க்கமுடியாத கிருமிகளை அழிக்கும் ஆன்டி பயாடிக்குகளைக் கண்டறிய முயல்கிறோம். இந்தப் புதிய வகை ஆன்டி பயாடிக் அதில் சிறப்புமிக்கதாக செயல்படுவதாகத் தெரிகிறது' என்றார்.
இந்தச்சோதனை கடந்த செப்டம்பர் 2018இல் இருந்து நவம்பர் 2019 வரை ஏறத்தாழ ஐரோப்பாவிலுள்ள 90 இடங்கள், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா போன்ற இடங்களில் நடைபெற்றது. இந்த ஆய்வில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பங்கு பெற்றனர். அதில் பைபராசிலின் மற்றும் தாசோபாக்டம் மருந்தாய் கொடுக்கப்பட்ட நோயாளிகளின் குணமடையும் விழுக்காடு 58.9% ஆக, செஃபெபைம் மற்றும் என்மெடாசோபாக்டம் கொடுக்கப்பட்ட நோயாளிகளின் குணமடையும் விழுக்காடு 79% ஆனது. ஆகையால் இந்த மருந்துக் கலவையை தரமான தொற்று நோய் குணப்படுத்தும் பொருளாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி பட்டாசு - கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கவனம்