ETV Bharat / sukhibhava

Anemia: பெண்கள் மத்தியில் வேகமாக அதிகரிக்கும் இரத்த சோகை.. ஆய்வாளர்கள் கூறும் காரணம் என்ன? - ரத்த அணு

உலக அளவில் நான்கில் ஒருவர் இரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் அதிகம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 2, 2023, 10:57 AM IST

ஹைதராபாத்: உலக அளவில் இரத்த சோகை(anemia) பிரச்சனை மக்கள் மத்தியில் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இரத்த சோகை பிரச்சனை பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் குறைந்தபாடு இல்லை என அமெரிக்காவின் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் & இவாலுவேஷனின் (IHME) முன்னணி எழுத்தாளர் வில் கார்ட்னர் கூறியுள்ளார்.

இரத்த சோகை என்றால் இரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ ஏற்படும் பிரச்சனைதான் இரத்த சோகை. இதன் காரணமாக உடலில் தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் இரத்தத்தில் குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும்.

இந்த இரத்த சோகை பிரச்சனை உலக அளவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் பொதுவாகக் காணப்பட்டாலும் பெண்கள் தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவம் உள்ளிட்ட நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதீத இரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே இரத்த சோகைக்கு ஆளாகும் காரணிகளாக உள்ளன.

ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை போதுமான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக மட்டுமே இரத்த சோகை ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 1.92 பில்லியன் மக்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.

இந்த இரத்த சோகையைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், மலிவான விலையிலும் இரும்புச் சத்து மாத்திரைகள், ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வுகள், குழந்தை திருமணம் தடை, கருத்தடை தொடர்பான விழிப்புணர்வு, மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளும், திட்டமிடல்களும், செயல்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் கடந்த 2021-ஆம் ஆண்டில், 17.5 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், 31.2 சதவீதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆராய்ச்சியாளர் வில் கார்ட்னர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து அவர் பேசுகையில், "இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகவும் கவலைக்குரிய கால கட்டமாக உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவர மேலும் மேம்பட்ட தீவிர நடவடிக்கைகள் வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இரத்த சோகைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான செயல்திட்டங்களை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இரத்த சோகை ஏற்பட 37 காரணங்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறப்பட்டாலும் அதில் முதன்மையானது இரும்புச் சத்துக் குறைபாடு" என்கிறார் ஆய்வாளர் வில் கார்ட்னர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆய்வுப்படி உலகளவில் 825 மில்லியன் பெண்களும் 444 மில்லியன் ஆண்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 66.2 சதவீதம் பேர் இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இரத்த சோகையால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் இரத்த சோகை ஏற்பட எச்.ஐ.வி, மலேரியா, பிற தொற்று நோய்கள் எனப் பரவலாகப் பல காரணிகள் இருந்தாலும் பொதுவான காரணி இரும்புச்சத்து குறைபாடுதான் என ஆய்வுகள் கூறுகின்றன.

இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் மாதவிடாய் இரத்த இழப்பு தொடர்பான புரிதலில் இடைவெளி இருப்பதாகவும், அதை மருத்துவரிடம் கூறி சிகிச்சை பெறுவதில் தயக்கம் இருப்பதாகவும் கூறும் ஆய்வாளர்கள் இதுதான் அவர்களில் ரத்தசோகை ஏற்படக் காரணமாக உள்ளது எனவும் அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வும், அறிவுறுத்தல்களும் தேவை எனவும் ஆராய்ச்சியாளர் வில் கார்ட்னர் கூறியுள்ளார். இந்த இரத்த சோகை மக்களின் மனநலனை பாதிக்கும் எனக்கூறும் அவர், அவர்கள் தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் கூட சிரமத்தைச் சந்திப்பார்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: எட்டு அடி கூந்தல் வளர்த்த பெண் : கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.