ETV Bharat / sukhibhava

வெஜிடேரியன் பிரியர்களின் கவனத்திற்கு... இந்த நாள் உங்களின் கொண்டாட்டத்திற்கானது! - சைவத்தை ஏற்றுக்கொண்டதற்கான நன்மைகள் என்ன?

இன்று (அக். 1) உலக சைவ தினம் கொண்டாடப்படுகிறது.

Its Your Day: Are You A Vegetarian
Its Your Day: Are You A Vegetarian
author img

By

Published : Oct 1, 2020, 12:49 PM IST

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி, 'உலக சைவ தினம்' கொண்டாடப்படுகிறது. இது சைவத்தை ஊக்குவிப்பதற்காகவும், ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படியான இந்த நன்னாளை முதன் முதலில் வட அமெரிக்க சைவ சங்கம் தான் 1977ஆம் ஆண்டில் அனுசரித்தது.

சைவ உணவு பிரியர்களின் வகைகள்...!

இந்தியாவின் தேசிய சுகாதார தளமான என்எச்பி-யின்படி, சைவ உணவு உண்பவர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. சைவ உணவு: இவர்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை மட்டுமே உண்பார்கள். முட்டை, பால், தேன் போன்ற எந்தவொரு விலங்கைச் சேர்ந்ததாகவும் இருக்காது.
  2. லாக்டோ-சைவம்: இவர்கள் முட்டைத் தவிர்த்து தாவர உணவு, பால் பொருட்களை உண்பார்கள்.
  3. லாக்டோ-ஓவோ சைவம்: இவர்கள் தாவர உணவு, பால் பொருட்கள், முட்டைகளை உண்பார்கள்.

ஹெல்தி டயட்..!

நீங்கள் எந்த வகை சைவ உணவுகளை உண்பவராக இருந்தாலும், உடலின் சரியான செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற ஆரோக்கியமான சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து என்.ஹெச்.பி(Natural Health Product) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை,

  • வைட்டமின் பி 12: பால் பொருட்கள், முட்டை, தானியங்கள், ரொட்டி, அரிசி பானங்கள்
  • வைட்டமின் டி: பால், சூரிய ஒளி
  • கால்சியம்: பால் பொருள்கள், அடர் பச்சை இலை காய்கறிகள், ப்ரோக்கோலி
  • புரதம்: பருப்பு வகைகள், பால் பொருட்கள் (பால் மற்றும் சீஸ்), முட்டை, உலர்ந்த பீன்ஸ், கொட்டைகள்
  • இரும்பு: முட்டை, உலர்ந்த பீன்ஸ், உலர்ந்த பழங்கள், தானியங்கள்
  • துத்தநாகம்: கொட்டைகள், தானியங்கள், உலர்ந்த பீன்ஸ், பூசணி விதைகள்

சைவத்தை ஏற்றுக்கொண்டதற்கான நன்மைகள் என்ன?

சைவ உணவு உண்பவர்களுக்கான நன்மைகளை என்.ஹெச்.பி(Natural Health Product) பட்டியலிட்டுள்ளது. அவை,

  • இது இதய நோய்கள், புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • சைவ உணவில் தானியங்கள், கொட்டைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளன. அதனால் அவற்றின் மூலம் நார், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்களைப் பெறமுடியும்.
  • உங்கள் கொழுப்பைக் குறைக்க இறைச்சியைத் தவிர்ப்பது சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
  • அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு.
  • அதுமட்டுமின்றி இதன் மூலம் விலங்குகள் உயிர் வாழ்கின்றன.

வெஜிடேரியனாக மாற...!

  • உங்கள் மனதில் ஒரு தெளிவை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
  • இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகள் உண்பதை கட்டுப்படுத்துங்கள்.
  • இறைச்சிக்குப் பதிலாக சோயா உள்ளிட்ட சைவ உணவுகளை உண்ணுங்கள்.
  • ஆன்லைனில் உள்ள சைவ குறிப்புகளை கண்டறிந்து காணுங்கள்.
  • உங்கள் சைவ நண்பரின் சிறந்த உணவு தேர்வுகள் குறித்து கலந்துரையாடுங்கள்.

சைவ மெனு மிகவும் பூர்த்திசெய்யக்கூடியது, மாறுபட்டது. சைவத்தில் தேர்வு செய்ய ஆயிரக்கணக்கான உணவுகள் உள்ளன. ஒரு சைவ உணவு உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளுக்குப் போதுமானதா? இல்லையா? என்பது குறித்து அறிய ஒரு ஊட்டச்சத்து நிபுணரைக் கூட அணுகுங்கள்.

இதையும் படிங்க...மகத்துவம் நிறைந்த கோதுமை புல்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.