ETV Bharat / sukhibhava

வைரஸ் காய்ச்சலுக்கும், கரோனாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

author img

By

Published : Sep 3, 2020, 6:33 PM IST

பருவகால வைரஸ் தொற்றுகள் மழைக் காலங்களில் நிறைய பரவுகின்றன. கரோனா வைரஸ் வானிலையின் தாக்கத்தின்போது மாறாமல் இருக்கிறதா? என மருத்துவர் கே.சங்கர், மருத்துவர் சஞ்சய் ஜெயினிடம் கேட்டோம்.

வைரஸ் காய்ச்சலுக்கும், கரோனாவுக்கு உள்ள வேறுபாடு?

காட்டுத் தீ போல கரோனாவின் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. இதையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கை அறிவித்தது. ஆனால் தொடர்ச்சியான பொருளாதார சுணக்கத்தின் பொருட்டு தற்போது நான்காம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதே தவிர, அதற்கான மருந்து ஏதும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே தற்போது பருவமழைக் காலம் தொடங்கி பிற வைரஸ்களும் தொற்றை பரப்பத் தொடங்கியுள்ளன.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கணக்கெடுப்பின் படி, கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 28 ஆயிரத்து 798 பேருக்கு பருவக் காய்ச்சல் ஏ (H1N1) பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிகிச்சைப் பலனின்றி ஆயிரத்து 218 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பருவக் கால வைரஸ் தொற்றுகள் குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.சங்கரிடம் (பொது மருத்துவம்) பேசினோம்.

”இந்த காலம் வரும் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். இது டெங்கு, பன்றிக் காய்ச்சல், நீரினால் பரவும் பிற வைரஸ் தொற்றுநோய்கள் பரவும் பருவமாகும். ஆனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் வரை கரோனா தொடர்ந்து இருக்கலாம். எனவே, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மிகவும் கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம். பிற வைரஸ் தொற்றுகள் பரவுவதால் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது இன்னும் மிக முக்கியமானது” என்கிறார் மருத்துவர் சங்கர்.

கரோனா பரவுதலில் மழைக் காலம் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா?

பருவகால வைரஸ் தொற்றுகள் மழைக்காலங்களில் நிறைய பரவுகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் வானிலையின் தாக்கத்தின்போது மாறாமல் இருக்கிறதா? என இந்தூரைச் சேர்ந்த ஆப்பிள் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சஞ்சய் ஜெயினிடம் கேட்டோம்.

“இதுவரையிலும் கவனித்து பார்த்ததில் கரோனா பரவுவதில் மழை பெய்வது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது மற்ற வைரஸ்களிலிருந்து கரோனாவை வேறுப்படுத்திக் காட்டுகிறது. பிற வைரஸ்கள் குளிரான மற்றும் ஈரப்பதமான சூழலிலும், மழைக் காலங்களிலும் பரவுகிறது. இந்த காலக்கட்டங்களில் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், கரோனா விவகாரத்தில் தேக்கமான வளைவைக் காண்கிறோம்” என்றார் மருத்துவர் சஞ்சய்.

இதே நேரத்தில் மருத்துவர் சங்கர் கூறுகையில், "ஈரப்பதமான வானிலையின் ஆபத்தை புரிய வைக்கிறது. ஈரப்பதமான சூழலில் வைரஸ் காற்றில் இருப்புக் கொள்கிறது. ஒரு மனிதன் இருமும் போது, தும்மும் போதும் எச்சில் துளிகளின் வாயிலாக காற்றில் பரவும் வைரஸ் குறைந்தபட்சம் 6 மணி நேரம் செயல்படுகிறது. ஒரு வைரஸுடைய இருப்பில் வெப்பநிலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது” என்றார் மருத்துவர் சங்கர்.

வைரஸ் தொற்று பரவும் விதம்?

ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட வானிலை மாற்றம் முக்கிய காரணி. வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் இருமலும், தும்மலும் அருகிலிருப்பவருக்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருக்கிறது. ஒருவர் மழையில் நனையும் போதும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இது குறித்து மருத்துவர் சஞ்சய் கூறுகையில், “ஒருவர் மழையில் நனையும்போது அவருடைய உடல் வெப்பநிலையில் உடனடியாகவே மாற்றம் நிகழ்கிறது. இதுதான் அவர்களுக்கு காய்ச்சல் (அல்லது) ஜலதோசம் வரக் காரணமாக இருக்கிறது. நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத பாக்டீரியாக்கள் பல்வேறு வைரஸ் உடலுக்குள் உள்ளன. ஆனால், வெப்பநிலை மாற்றத்தின்போது இவை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படத் தொடங்கிவிடுகின்றன.

எப்படி தற்காத்துக் கொள்வது?

இந்த பருவகாலத்தில் வழக்கமான வைரஸ் காய்ச்சலுக்கு நடுவில் கரோனா வைரஸும் பரவி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகிறது. இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர் சஞ்சய் பரிந்துரைக்கிறார்.

அவை பின்வருமாறு;

  1. அடிக்கடி சோப்பு (அ) சானிடைசரைப் பயன்படுத்தி தண்ணீரில் 20 வினாடிகளுக்கு கைகளை நன்கு தேய்த்து சுத்தப்படுத்துவது அவசியம். சானிடைசரி ஆல்கஹால் கலந்திருப்பது முக்கியம்.
  2. எப்போதும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முடிந்த வரையில் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், வெளியில் சென்றால் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும்.
  3. பொதுவெளியிலோ, வீட்டிலோ யாருக்கேனும் இருமல் (அ) தும்மல் ஏற்பட்டால் அவர்களிடமிருந்து தள்ளியிருங்கள்
  4. முகக்கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது.
  5. மிக கவனமாக சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
  6. உங்களது உடலில் திடீரென வெப்பம் மாறுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  7. மழையில் நனையாமல் இருக்க எப்போது குடை (அ) மழைக்கான உடையை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
  8. வெளியில் உணவு எடுத்துக் கொள்வதை தவிருங்கள். வெளி உணவகங்களில் சாப்பிடுவதால் தொண்டை, குடல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலேயே சமைத்து சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  9. நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தியானம், யோகா போன்றவற்றை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
  10. உங்கள் மருத்துவ நிலைமைகளை அவ்வப்போது சரிபார்த்துவிடுங்கள். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுகள். துணை நோய்கள் உடையவர்களை கரோனா போன்ற வைரஸ் நோய்கள் எளிதில் தாக்கும். அதனால், மருந்துகளைச் சரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

“அநாவசியமாக வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். ஏனென்றால் கரோனாவின் பெருக்கத்தை குறைக்க மட்டுமே முடியும். அதை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சத்தான உணவு, உடற்பயிற்சி என நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதே தற்போதைய தீர்வு. நாம் கரோனாவுடன் வாழத் தொடங்கிவிட்டோமே தவிர, இன்னும் பெருந்தொற்று முடியவில்லை.

ஆகவே, நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் நாம் முடிந்தவரை மாற்றிக் கொள்ள வேண்டும். சீக்கிரமாகவோ (அ) தாமதமாகவோ இந்த சூழல் மாறும். அதுவரை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் சஞ்சய்.

இதையும் படிங்க:பருவ மாற்றங்களை கண்டறியும் செயற்கைக்கோள்! பள்ளி மாணவிகள் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.