ETV Bharat / sukhibhava

புற்றுநோய் சிகிச்சைக்கு பலனளிக்கும் மஞ்சள் - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு! - ஐஐடி சென்னை

சென்னை: ரத்த, எலும்பு மஜ்ஜை புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மஞ்சளில் காணப்படும் முதன்மை மஞ்சளகமான குர்குமின் உதவும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களகன் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

iit-madras-researchers-show-active-principle-from-turmeric-can-potentially-improve-outcomes-of-cancer-therapies

author img

By

Published : Jul 14, 2020, 2:56 AM IST

சென்னை ஐஐடி பயோடெக்னாலஜி துறை பேராசிரியர்களான ரமா சங்கர் வர்மா, பூபத், ஜோதி மேதா ஆகியோரது தலைமையின் கீழ் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

இதில், லுகுமியா புற்றுநோயால் (ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய்) பாதிக்கப்பட்டுள்ள உயிரணுக்களில் குர்குமின் செலுத்தப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் சீர் அடைவது மட்டுமின்றி உயிரணுக்கள் அழிவதையும் தடுக்கும் வல்லமை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது

புற்றுநோய் சிகிச்சையின்போது, குர்குமினில் உள்ள TRAIL’ எனப்படும் புரதத்தால் ஏற்படும் புற்றுநோய் உயிரணு இறப்பை மேம்படுத்த முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக புற்றுநோய் சிகிச்சையின்போது, உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிரனுக்களின் இறப்பைத் தூண்டுவது முக்கியம். அந்த வேலையை Trail புரதத்தில் உள்ள அப்போப்டொசிஸ் சரியாக செய்கிறது.

இந்த ஆராய்ச்சியானது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட உயிரணுக்களில் மேற்கொள்ளப்பட்டது. ஒருவேளை இந்த ஆராய்ச்சியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் மேற்கொள்ளும்போதும் இதே மாதிரியான முடிவுகள் வருமா அல்லது மாறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.