சென்னை: மழை எல்லாரும் பிடித்த ஒன்றே, அனைவரும் விரும்பும் ஒன்றே. குறிப்பாக இளம்பெண்களுக்கு மழை ஒரு கொண்டாட்டத்தை உருவாக்கும். ஆனால் இந்த மழைக்காலம் மேக்கப் பிரியர்களுக்கும், மணப்பெண்களுக்கும் ஒரு மணி நேரம் உட்கார்ந்து போட்ட மேக்கப் கலைந்து விடுமோ என்ற பயம், கவலை இருக்கும். இனிமேல் அத்தகைய கவலை தேவை இல்லை. மழைக்காலத்திற்கு ஏற்றவாறு, மழையில் அழியாதவாறு எப்படி மேக்கப் போடலாம். தற்போது திருமண சீசன் வருவதால் மணப்பெண்கள், எந்த வகையான மேக்கப்பை தேர்வு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஸ்கின் கேர் பண்ணுங்க: மழைக்காலத்தில் சருமம் பொலிவின்றி வறண்டு காணப்படும். ஆகையினால், க்ளன்சர், டோனர் பயன்படுத்தலாம். சரும ஈரப்பதத்திற்கு மாய்ஸ்சரைசர் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இவை சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி, சரும பராமரிப்புக்கு உதவும்.
வாட்டர் ப்ரூப் மேக்கப் போடலாம்: தற்போது வாட்டர் ப்ரூப் மேக்கப் போன்றவை வந்து விட்டன. ஆகையினால் மணப்பெண்கள் வாட்டர் ப்ரூப் மேக்கப், ஹெச் டி மேக்கப் (HD Makeup) போன்றவற்றை பயன்படுத்தலாம். மாடல்கள், மணப்பெண்கள் என பலர் ஏர்பிரஷ் மேக்கப்பை தேர்வு செய்கின்றனர். ஆனால் ஏர்பிரஷ் மேக்கப்பை விட ஹெச்.டி மேக்கப் சிறந்தது. நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: அரிசி சாப்பாட்டுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமே இல்ல: நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
மேக்கப் பிரியர்களுக்காக: ஹைலைட்டர் (High lighter), பிளஷ் (Blush) போன்றவற்றை திரவ நிலையில் உபயோகப்படுத்தாமல், பவுடர் வடிவில் உபயோகப்படுத்தலாம். வாட்டர் ப்ரூஃப் காஜல், ஐ லைனர், மஸ்காரா போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். கருப்பு நிற காஜல் போன்றவற்றை பயன்படுத்தாமல், ப்ரவுன் நிற காஜலை பயன்படுத்தலாம். மேட் லிப்ஸ்டிக் (Matte Lipstick) போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். தேவைபடும் பட்சத்தில் வாட்டர் ப்ரூஃப் பவுண்டேசனை, பிரைமருடன் போட்டுக்கொள்ளலாம்.
க்ளிட்டர் வேண்டாம்: முடிந்தவரை மேக்கப்புகளில் க்ளிட்டர் (Glitter) பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயலாத நிலையில் கண்களுக்கு மட்டும் க்ளிட்டர் ஐ மேக்கப்பை போட்டு கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: கண்களுக்குப் போடும் மேக்கப்பால் கண் பார்வைக்கு ஆபத்தா? என்ன செய்யலாம்.?