ETV Bharat / sukhibhava

'வெயிலோடு விளையாடுவோம்' - சூரிய வெளிச்சத்தின் நன்மைகள் - வைட்டமின் D

வெயில் காலத்தில் என்றும் சந்தோஷமான மனநிலையில் இருப்பது போல தோன்றும். அப்படி வெயிலில் என்ன தான் இருக்கிறது? சூரிய வெளிச்சத்தில் உலாவுவதின் நன்மைகள் என்ன..? இங்கே விரிவாகக் காணலாம்.

சூரிய வெளிச்சத்தின் நன்மைகள்
சூரிய வெளிச்சத்தின் நன்மைகள்
author img

By

Published : Jan 30, 2022, 10:51 PM IST

உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் D-யின் அவசியம் அனைவரும் அறிந்ததே. அது சூரியனில் தான் அதிகமாகவும், எளிதாகவும் கிடைக்கிறது.

ஆனால்,இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் மக்களால் அவ்வளவு எளிதாக சூரிய வெளிச்சத்துடன் நேரம் செலவிட முடிவடில்லை. அது நம் உடலை நிச்சயம் பாதிப்புகளுக்கு உட்படுத்தும்.

அதனால்,வெகுநேரம் வீட்டின் உள்ளே இருந்து, சூரிய வெளிச்சத்தில் உலவாமல் இருத்தல் என்பது உடலுக்கு கேடே ஆகும்.

நமது ஊட்டச்சத்து நிபுணரும், வல்லுநருமான திவ்யா குப்தா கூறுகையில்,”வைட்டமின் D, உங்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது. நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டுகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்கிறது. நமது நரம்பு மண்டலத்திற்கும் மூளை வலிமைக்கும் நல்லது” எனத் தெரிவித்தார்.

வைட்டமின் D, உடல் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிக உதவி செய்யும் ஒன்றாகும். இந்திய அகாடெமி ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் ஐசிஎமார் சார்பில் நடத்திய ஆராய்ச்சியில், 70 விழுக்காடு இந்தியர்கள், வைட்டமின் 'D' குறைபாட்டினால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இதில்,குழந்தைகளும் அடக்கம்.

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் மணிந்தர் சிங் பேசுகையில்,”சூரியனை விட்டு விலகி இருத்தல் என்பது பல்வேறு வகையான நோய்களை அழைப்பதற்குச் சமமாகும்.

கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை(Phosphate) ஜீரணிக்க வைட்டமின் D பெரிதும் உதவுகிறது. இதனால் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் வலுப்பெற்று ஆரோக்கியம் அடையும்” எனத் தெரிவித்தார்.

எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கையில், சூரியனை விட்டு விலகி இருப்பது ரிக்கெட்ஸ்(Rickets) மற்றும் ஓஸ்டியொபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு சார்ந்த நோய்களுக்கும் வித்திடும்.

எலும்புகளின் ஆரோக்கியத்தைத் தாண்டி, பல ஆராய்ச்சிகளில் சூரிய வெளிச்சத்தில் உலவுவது மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.

அதில், சூரிய வெளிச்சத்தில் அதிகம் உலாவிய பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் அவ்வளவு எளிதாக வருவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

வைட்டமின் D குறைபாட்டினால் புற்றுநோய், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், அலெர்ஜி,கை-கால் வலி, மறதி, இன்சோம்னியா போன்ற நோய்கள் வரவும் வாய்ப்புகள் உண்டு.

சூரிய வெளிச்சம் இயற்கையாகக் கிடைக்கும் கிருமி நாசினியாகும். பல அபாயகரமான கிருமிகள்,வைரஸ்கள் சூரிய வெளிச்சத்தில் அழியும்.

அதுமட்டுமின்றி தோள் புற்று நோய்களில் இருந்தும் இது காப்பாற்றும்

இது எப்படி நன்மை வாய்ந்தது?

2003இல் ”Investigative Dermatology" எனும் பத்திரிகையில் வெளியானதைப் பொறுத்த ஆராய்ச்சிக்கட்டுரையில், சூரிய வெளிச்சம் என்பது ’Endorphins' எனும் சந்தோச ஹார்மோன்களை வெளியிடச் செய்யும் வினையூக்கியாகும்.

மழைக்காலத்தில் நீங்கள் சோர்வாக,மனம் அலைப்பாய்ச்சலுடன்,மந்தமாக இருப்பதாக உணர்ந்திருப்பீர்கள். அதற்குக்காரணம் சூரிய வெளிச்சம் இல்லாமை தான். மக்களின் உளவியல் நிலையை சூரியனின் இல்லாமை சீர்குலைக்கும்.

'endorphins'-ஐத் தவிர்த்து சூரிய வெளிச்சம் மேலும் சில ஹார்மோன்களையும் வெளியிட உதவும்.

அவை 'Serotonin' மற்றும் 'Melotonin' இந்த ஹார்மோன்கள் இன்சோம்னியா மற்றும் மனஅழுத்தம் போன்றவைகளில் இருந்தும் விடுவிக்கும்.

எது சிறந்த நேரம்?

வல்லுநர் திவ்யா குப்தா கூறுகையில், ’விடியற்காலை தான் சூரிய வெளிச்சத்தில் இருப்பதற்கு சிறந்த நேரம் ,பின்பக்கம் திரும்பி சூரிய வெளிச்சத்தில் நிற்பதே சிறந்தது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட் பெருந்தொற்று காலங்களில் 90 சதவீதம் பேருக்கு பார்வை குறைபாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.