ETV Bharat / sukhibhava

ஆரோக்கியத்தில் தேனின் பங்கு என்ன...? வாருங்கள் அறிந்துகொள்வோம்... - உலர் பேரீச்சம்பழம் மற்றும் தேன்

ஒட்டுமொத்த அரோக்கியத்தில் தேன் எப்படி முன்னிலை வகுக்கிறது என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

How is Honey good for overall health  what combinations of honey are good for health  medicinal benefits of honey  ஆரோக்கியத்தில் தேனின் பங்கு  தேனின் நன்மைகள்  இதற பொருள்களுடன் தேனின் தன்மை  எலுமிச்சையுடன் தேன்  உலர் பேரீச்சம்பழம் மற்றும் தேன்  வெந்தையத்துட தேன்
ஆரோக்கியத்தில் தேனின் பங்கு
author img

By

Published : Mar 9, 2022, 10:04 AM IST

சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பதாக இருந்தாலும் சரி அல்லது தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதாக இருந்தாலும் சரி, நாம் வீட்டு வைத்தியம் பற்றி பேசும் போது சமையலறை பொருட்களில் தேன் எப்போதும் முதலிடத்தை வகுக்கிறது.

ஆயுர்வேதத்திலும், தேனின் நன்மைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் ஆரோக்கியத்திற்கு இது வழிவகுக்கிறது. தேனை சில பொருள்களுடன் இணைத்து அதன் பண்புகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிவோம்.

How is Honey good for overall health  what combinations of honey are good for health  medicinal benefits of honey  ஆரோக்கியத்தில் தேனின் பங்கு  தேனின் நன்மைகள்  இதற பொருள்களுடன் தேனின் தன்மை  எலுமிச்சையுடன் தேன்  உலர் பேரீச்சம்பழம் மற்றும் தேன்  வெந்தையத்துட தேன்
மருத்துவ குணம்

ஆயுர்வேதத்தின் கூறுகளின் படி, தேனுக்கு சொந்த ஆற்றல் இல்லை. அவை எந்த பொருள்களுடன் இணைக்கப்படுதோ, அதற்க்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளும். மேலும் அவை வெப்பமானதாகவும் இருக்கலாம், குளிர்ச்சியானதாகவும் இருக்கலாம். அதனால், பல ஆயுர்வேத மருந்துகளுக்கு, தேன் ஒரு சிறந்த கூறாக கருதப்படுகிறது. பிற பொருள்களுடனும் சரி, தனித்தும் சரி, தேன் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கள்

தேனின் ஊட்டச்சத்து குறித்து நாம் பார்த்தால், அதில், பிரக்டோஸ் (Fructose), நியாசின் (Niacin), கார்போஹைட்ரேட் (Carbohydrates), ரிபோஃப்ளேவின் (Riboflavin), வைட்டமின் பி6 (Vitamin B6), வைட்டமின் ஏ (Vitamin A), வைட்டமின் சி (Vitamin C), இரும்பு (Iron), மெக்னீசியம் (Magnesium), கால்சியம் (Calcium), கலோரிகள் ( calories), சோடியம் (Sodium), பொட்டாசியம் (Potassium) மற்றும் நார்ச்சத்து என பல்வேறு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில், நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் (Anti-oxidant) பண்புகள் அதிகம் காணப்படுகின்றன.

தேனின் நன்மைகள்

இது குறித்து மும்பையில் உள்ள நிரோக் ஆயுர்வேத மருத்துவமனையின் ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் மனிஷா காலே கூறுகையில், “ஆயுர்வேதத்தில் சளி, விஷம், விக்கல் போன்றவற்றை நீக்குவதற்கு தேன் சிறந்ததாக கருதப்படுகிறது. தேனை உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், அழகும் அதிகரிக்கும்.

பல வீட்டு வைத்தியங்களில் தேன் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட முறையில் நன்மை பயக்கும். உதாரணமாக, வெதுவெதுப்பான நீரில் தேனை உட்கொள்வது அல்லது பச்சையாக உட்கொள்வது மலச்சிக்கல், தொண்டை புண், எடை இழப்பு போன்ற செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.

அதே நேரத்தில், உளுந்து மாவு, மஞ்சளுடன் தேனை கலந்து ஃபேஸ் மாஸ்க் போட்டுக்கொண்டால், பளபளப்பான சருமம் கிடைக்கும். அல்லது தேனை மட்டும் தடவிக் கொண்டால், தோல் சார்ந்த பிரச்னைகளை வராமல் தடுத்து , சருமம் ஜொலிக்கும்.

மேலும் தேன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், காயங்களை ஆற்றவும், நச்சு நீக்கவும், பசியை மேம்படுத்தவும் மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதர பொருள்களுடன் தேனின் தன்மை

ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில், தேன் பல மூலிகைகள் மற்றும் பொருள்களுடன் இணைந்து சிறந்து விளங்குகிறது. அதில் சில.

உடல் எடை குறைக்க உதவும் தேன்

எலுமிச்சையுடன் தேன்

அதிகாலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாறுடன் தேனை சேர்த்து உட்கொண்டால், செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் குறைத்து, உடலை நீரேற்றமாக வைத்து, அழகை மேம்படுத்தும். மேலும் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

உலர் பேரீச்சம்பழம் மற்றும் தேன்

உலர் பேரீச்சம்பழங்களில், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இத்துடன் தேனை இணைக்கும் போது, ​​​​இவ்விரண்டின் பண்புகளும் சேர்ந்து பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. முக்கியமாக நினைவாற்றல், உடல் வலிமை மற்றும் பசியை அதிகரிக்கிறது.

ஆண் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால் இது ஒரு நல்ல கலவையாகும். இது அவர்களின் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு, அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

வெந்தையத்துட தேன்

வெந்தயம் மற்றும் தேன் ஆகியவை சிறந்த கலவையில் கணக்கிடப்படுகின்றன. இந்த கலவையானது வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து உடல் எடையைக் குறைப்பது, செரிமான பிரச்னைகளை போக்குவது, கொழுப்பைக் குறைப்பது, ஆண்களில் ஆண்மையியக்குநீரை அதிகரிப்பது, உடல் வீக்கத்தைக் குறைப்பது, தாய்மார்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

சருமம் பளபளக்க

இதனை தேனுடன் சேர்க்க வேண்டாம்

  • நெய், எண்ணெய் அல்லது கொழுப்பு
  • முள்ளங்கி
  • மிகவும் சூடான நீர், பால் அல்லது வேறு ஏதேனும் பானம்
  • திராட்சை
  • தாமரை விதைகள்

மருத்துவரை அனுகவும்

தேன் உட்கொள்வது பாதுகாப்பானது என்றாலும், சில சூழ்நிலைகளில், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், சந்தையில் பல நிறுவனங்கள் தேனை விற்கின்றன. அதில் சர்க்கரையும் உள்ளது, மற்றும் அது ஒருவரின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

எனவே, சுத்தமான தேனை வாங்க முயற்சி செய்யுங்கள். வேறு ஏதேனும் மூலப்பொருளுடன் அல்லது வீட்டு வைத்தியமாக தேனை உட்கொள்வதற்கு முன், ஒருமுறை உங்கள் மருத்துவரை அணுகவும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமையலறையில் கண்ணாடி பொருள்களை வைக்கலாமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.