ETV Bharat / sukhibhava

உணவில் அதிக அளவு உப்பு... கவனம் தேவை... - பேராசிரியர் மேத்யூ பெய்லி

உணவில் அதிக அளவு உப்பை சேர்த்து கொண்டால் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவில் அதிக உப்பா? கவனம் தேவை...
உணவில் அதிக உப்பா? கவனம் தேவை...
author img

By

Published : Nov 18, 2022, 10:08 AM IST

சான் பிரான்சிஸ்கோ : இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அதிக உப்பு மன அழுத்த ஹார்மோனின் அளவை 75 சதவிகிதம் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக உப்பு நிறைந்த உணவு நமது மன ஆரோக்கியத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வது நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும்" என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் இருதய அறிவியல் மைய சிறுநீரக உடலியல் பேராசிரியர் மேத்யூ பெய்லி தெரிவித்துள்ளார்.

"அதிக உப்பு சாப்பிடுவது இதயம், இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு நம் மூளை மன அழுத்தத்தைக் கையாளும் விதத்தையும் மாற்றுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி உப்பு உட்கொள்ளல் அளவு ஆறு கிராமுக்கு குறைவாக உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் சுமார் ஒன்பது கிராம் அளவு உப்பை சேர்த்து கொள்கின்றனர்.

இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா ஆகியவற்றின் அபாயங்களை அதிகரிக்கிறது. என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது . இந்த ஆய்வுக்காக எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் எலிகளைப் பயன்படுத்தினர்.

அதிக உப்பு உட்கொள்வது கவலை மற்றும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என்பதை தீர்மானிக்க ஆய்வுகள் ஏற்கனவே நடந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : இதயநோய் மற்றும் பக்கவாத அபாயத்தை குறைக்கும் காலை உடற்பயிற்சி... ஆய்வில் புதிய தகவல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.