ETV Bharat / sukhibhava

ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? - Herbal and Ayurvedic teas

பல்வேறு மன மற்றும் உடலியல் பிரச்னைகளிலிருந்து விடுபட ஆயுர்வேத டீ குடிப்பதை மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?
ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?
author img

By

Published : Sep 25, 2022, 1:17 PM IST

பொதுவாகவே மக்களிடையே வேலைப்பளு, மன அழுத்தம், ஒருவித பதற்றம், நடத்தை சார்ந்த பிரச்னைகள் ஆகியவைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து விடுபட பலரும் மருத்துவர்களை நாடி வருகின்றனர். ஆனால், மருந்துகளால் சில சமயங்களில் பக்க விளைவுகளும் வருகின்றன.

எனவே, பெரும்பாலானோர் உடற்பயிற்சி, யோகா என்ற நிலையினை தேடிச்செல்கின்றனர். இதனிடையே மூலிகைகளை உள்ளடக்கிய ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வித பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக,

அஸ்வகந்தா டீ: கடந்த 2019ஆம் ஆண்டில் அஸ்வகந்தா அடங்கிய டீயை குடித்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்ற அனுமானத்துடன் மூன்று குழுக்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் முதல் குழுவிற்கு 250 மி.கி. அளவிலான அஸ்வகந்தா டீ, இரண்டாம் குழுவிற்கு 600 மி.கி. அளவிலான அஸ்வகந்தா டீ மற்றும் மூன்றாம் குழுவிற்கு வேறு டீ கொடுக்கப்பட்டது.

8 வாரங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், 600 மி.கி. அஸ்வகந்தா டீயை உட்கொண்ட மாதிரி சோதனையாளர்களுக்கு ‘கார்டிசோல்’ என்னும் அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் அதிகளவில் குறைந்தது கண்டறியப்பட்டது.

கெமோமில் டீ: 2013 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், கெமோமில் எனப்படும் பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீ மூலம் மன அழுத்தம் பரவலாக குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கெமோமில் டீ சிலருக்கு உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

லெமன் டீ: 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, லெமன் டீயை பருகுவது பலருக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பதாக தெரிய வந்தது. தற்போது லெமன் டீ சர்வதேச அளவில் பலராலும் பருகப்பட்டு வருகிறது.

லாவண்டர் டீ மற்றும் ரோஸ் டீ: லாவெண்டர் மற்றும் ரோஸ் ஆகிய டீக்களின் வாசனையாலேயே பல்வேறு மன அழுத்தம் மற்றும் உடல் நன்மைகளிலிருந்து விடுபடலாம்.

இதையும் படிங்க: தினமும் வால்நட்ஸ் சாப்பிடுவதால் நடக்கும் மேஜிக்.... ஆய்வில் தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.