ETV Bharat / sukhibhava

பட்டாசு மகிழ்ச்சி.. பிறருக்கு தொல்லையாகலாமா? சமூக அக்கறை கொள்வோம்! - firecrackers

Harms caused by bursting of firecrackers in tamil: தீபாவளிக்கு பட்டாசுள் வெடிக்கும் முன்பு சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மிஞ்சிய கோரிக்கைகளும் சமூகத்தில் இருக்கின்றன. இது தொடர்பான சில தகவல்களை பார்க்கலாம்.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 1:01 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம்.. ஐயோ பட்டாசு வெடிப்பார்களே என்ன செய்வது என்ற அச்சத்தோடு இருக்கும் மக்கள் கூட்டம் மறுபக்கம். இதற்கு நடுவே சுற்று சூழலும், செல்ல பிராணிகளும், வீட்டில் வளர்க்கும் கால்நடைகளும், காக்கை, குருவி உள்ளிட்ட பறவைகளும். நம் கொண்டாட்டங்கள் பிறருக்கு திண்டாட்டமாக இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

தீபாவளி நாள் அன்று பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று, ஒலி என அனைத்தும் மாசுபடுகிறது. பட்டாசு வெடிக்கவே கூடாது என்ற அடிப்படையில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு பல கட்ட பிரச்சனைகளும் நடந்தது. ஆனால் சிவகாசி பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல வழிகாட்டு நெரிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், தனிமனித சிந்தனையின் அடிப்படையில் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள், பச்சிளம் குழந்தைகள் இருந்தால் அவர்களின் ஆரோக்கியத்தை உங்கள் கொண்டாட்டம் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பட்டாசு வெடிப்பது மனிதர்களை எவ்வாறு பாதிக்கும்: பட்டாசுகளில் காட்மியம் என்ற தனிமம் உள்ளது. பட்டாசுகளை வெடிக்கும் போது, இவை காற்றில் கலந்துவிடும். அந்த காற்றை சுவாசிப்பதால் சாதாரண மனிதர்களுக்கே மூச்சு திணரல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில், இருதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள், பச்சிளம் குழந்தைகளின் நிலை குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.மேலும் பாச்சு வெடிக்கும்போது அந்த காற்றை சுவாசிப்பதால் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவது மட்டும் இன்றி, பட்டாசுகளில் உள்ள காப்பர் சுவாச பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பட்டாசுகளை வெடிக்கும் போது வண்ணங்களை உருவாக்க கதிரியக்க கூறுகள் பயன்படுத்தப்படும். இவை புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை எனவும் கூறப்படுகிறது. மேலும், பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் இரசாயனங்கள், கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் தொற்றுகளை ஏற்படுத்தலாம் எனவும், பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து வரும் சத்தத்தால் பச்சிளம் குழந்தைகள் பதட்டம் கொள்வார்கள் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விலங்குகள் பறவைகள் எவ்வாறு பாதிக்கப்படும்: பட்டாசு வெடிப்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. நாம் வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கும் நாய்கள் பட்டாசுகள் வெடிப்பதன் சத்தத்தை கேட்டு அச்சம் அடைந்து வீட்டில் உள்ளவர்களை கூட கடிக்க நேரிடும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல, பறவைகள் மற்றும் விலங்குகள் உணர்திறன் மிக்கவை. அவைகள் மனிதர்களால் கேட்க முடியாத மீயோலிகளைக் கூட கேட்கும் திறன் கொண்டவை. அதனால் பட்டாசு சத்தத்தை கேட்கும் போது அதிமாக பதற்றம் அடைகின்றன. வௌவால் போன்ற உயிரினங்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்லத் திட்டமா?... அப்போ இதை தெரிஞ்சுகோங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.