ETV Bharat / sukhibhava

ஹேங் ஓவரை ஆயுர்வேத முறையில் சமாளிப்பது எப்படி? - ஹேங்ஓவர் ஆயுர்வேத மருந்து

அதிகப்படியாக மது அருந்தும் நபர்களுக்கு ஏற்படக்கூடிய ஹேங் ஓவரை சமாளிக்க உதவும் ஆயுர்வேத முறைகள் குறித்து டாக்டர்.நிர்மலா கூறும் ஆலோசனைகள்...

Hangover
Hangover
author img

By

Published : Aug 22, 2020, 3:08 PM IST

மதுபானம் உடலுக்கு தீங்கானது என்றாலும், இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பானமாக இதுதான் இருக்கிறது. ஒரு விருந்தாக இருந்தாலும் சரி, வார இறுதி கொண்டாட்டங்களாக இருந்தாலும் சரி, அனைத்திலும் மது கட்டாயமாகியுள்ளது. மது அருந்துவது நீண்டகால உடல் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும். ஆனால், உடனடியாக என்று பார்த்தால், மறுநாள் பலரும் வெறுக்கும் ஹேங் ஓவர் (hangover) எனப்படும் தலைவலியை ஏற்படுத்தும்.

இதுகுறித்து ஆந்திர மாநிலம் அம்ருதா ஆயுர்வேத மருத்துவமனையின் ஆயுர்வேத டாக்டர் நிர்மலா தேவி கூறுகையில், “சரியான முறையில் சரியான அளவில் ஒருவர் மதுபானத்தை எடுத்துக்கொண்டால் அது, அவர்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், அதற்கு ஒருவர் அடிமையாகும்பட்சத்தில் உடல் மற்றும் மனரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

மது அருந்துவதால் ஏற்படும் நோய்களை ஆயுர்வேதம் ‘மடதியா’ என்று வரையறுக்கிறது. அறிகுறிகளை பொறுத்து, இந்த நோய்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் என்று கூறுகிறார் டாக்டர் நிர்மலா.

  • பனத்யாயா (அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக ஏற்படும் கடும் போதை)
  • பரமதா (ஹேங் ஓவர்)
  • பனாஜிர்னா (ஆல்கஹால் இரைப்பை அழற்சி)
  • பனவிப்பிரமா (குடிப்பழக்கம்)

ஹேங் ஓவர் அறிகுறிகள்

முந்தைய நாள் அதிகப்படியாக ஒருவர் மது அருந்தினால், மறுநாள் காலையில் அவர்கள் ஹேங் ஓவரை அனுபவிப்பார்கள். இதன் அறிகுறிகள்:-

  • சிவந்த கண்கள்
  • அதிகப்படியான தாகம்
  • தலைவலி
  • ஒலி மற்றும் ஒளியை அதிகம் உணரும் திறன்
  • ஹாலிடோசிஸ் எனப்படும் மூச்சுவிடுவதில் சிரமம்
  • அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு
  • ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிரமம்
  • சோர்வு மற்றும் பதட்டம்
  • மோசமான மனநிலை
  • இதயதுடிப்பு அதிகரிப்பு
  • தலைச்சுற்றல்
  • குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு
  • நடுக்கம்

இதுகுறித்து டாக்டர் நிர்மலா கூறுகையில், “குடிக்கும்போதோ அல்லது அதற்குப் பிறகோ ஹேங் ஓவரின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், அந்த நபருக்கு ஆல்கஹால் விஷம் ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஹேங் ஓவரை தடுப்பதற்கான ஒரே வழி, மது குடிப்பதை நிறுத்துவது அல்லது குறைந்த அளவு மட்டும் குடிப்பது. மேலும், இதனை குணப்படுத்த முடியாது, ஆனால் அதன் அறிகுறிகளைக் குறைக்கலாம் ” என்றார்.

இருப்பினும், பெரும்பாலான ஹேங் ஓவர்கள் 24 மணி நேரத்திற்குள் தானாக சரியாகிவிடும். அவற்றின் அறிகுறிகளை குறைக்க சில விஷயங்களை நாம் பின்பற்றலாம்.

கர்ஜுராடி மந்தா

பேரீச்சம்பழம், புளி, திராட்சை, மாதுளை ஆகியவற்றை சேர்த்து கர்ஜுராடி மந்தா செய்யப்படுகிறது. இதன் மூலம் ஹேங் ஓவரை குறைக்கலாம்.

செய்வது எப்படி?

  • பேரீச்சம்பழம், புளி மற்றும் திராட்சையை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • அனைத்து பொருள்களையும் நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்துகொள்ளுங்கள்.
  • இப்போது 1: 4 என்ற விகிதத்தில் தண்ணீரை சேர்த்து உட்கொள்ளுங்கள்.

காலை, மாலை என இரண்டுவேளையும் 100 மி.லி அருந்தவேண்டும். இது உடலுக்கு அதிக வலிமையை அளிக்கிறது. உண்பதற்கும் இது எளிமையாக இருக்கும். இது ஹேங் ஓவர் அறிகுறிகளை கணிசமாக குறைக்கும்.

ஹேங் ஓவர் பாதிப்புகளை குறைக்க சில ஆயுர்வேத மருந்துகளும் உள்ளன. இருப்பினும், இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு முதலில் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

ஆயுர்வேத மருந்துகள்

  • ஃபாலாத்ரிகாடி குவாத் சுர்னா (Phalatrikadi kwath churna)
  • அஷ்டாங்க லாவனா (Ashtanga lavana)
  • எலாடி மோடகா (Eladi modaka)
  • மாகல்யாணகா க்ருதா (Maha kalyanaka ghruta)
  • புனர்நவாடி க்ருதா (Punarnavadi ghruta)
  • ப்ரூஹத் தத்ரி தைலா (Bruhat dhatri taila)

இதையும் படிங்க: தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு இருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.