ETV Bharat / sukhibhava

முடி உதிர்வை தடுக்குமா சக்கரவள்ளி கிழங்கு.? - sweet potato benefits

முடி உதிர்வை தடுக்க சக்கரவள்ளி கிழங்கு உள்ளிட்ட முக்கிய 7 உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முடி உதிர்வை தடுக்கும் சக்கரவள்ளி கிழங்கு

author img

By

Published : Mar 1, 2023, 7:40 AM IST

Updated : Mar 4, 2023, 10:57 PM IST

முடி உதிர்தல் மிகவும் பொதுவான மற்றும் பரவலான பிரச்சனையாகிவிட்டது. அதிகப்படியான மாசுபாடு, கலப்பட உணவுப் பொருட்கள், மன அழுத்தம், வேலைப் பழு, தூக்கமின்மை உள்ளிட்டவை முடி உதிர்தலுக்கு காரணங்களாக அமைகின்றன. சிலருக்கு பரம்பரை வழியாகவும், ஹார்மோன் பிரச்சனை காரணமாகவும் முடி உதிர்கிறது.

இருப்பினும், இளைஞர்களிடையே முடி உதிர்வு 18 வயது முதலே ஆரம்பிப்பது முறையான பராமரிப்பு இல்லாததால் ஏற்படுகிறது. இயற்கையான எண்ணெய்கள், சிகிச்சை முறைகளை பின்பற்றினாலும், உணவிலும் கவனம் செலுத்துவது முடி உதிர்வை தடுக்க உதவும். மிகவும் சத்தான மற்றும் சமச்சீரான உணவு முறையானது, முடி உதிர்தலை மட்டுமல்லாமல் பல்வேறு உடல்நலப் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கும். ஆகவே, முடி உதிர்வை தடுக்கும் 7 உணவுகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு?

இலை காய்கறி வகைகள்: நமது உணவில் இலை காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன. இரும்பு சத்து முடி செல்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. ஆகவே, முடி உதிர்வதைத் தடுக்க கீரை, கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெண்ணெய் பழம்: அவகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி12, துத்தநாகம், ரிபோஃப்ளேவின், தயாமின், வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒன்பது அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது.

பிரேசில் நட்ஸ்: தென் அமெரிக்காவில் விளையும் விதை வகையான பிரேசில் நட்ஸ் செலினியம் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இது அங்காடிகளில் கிடைக்கும். இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். புதிதாக உருவாகும் முடி நிலைத்திருக்க செலினியம் பயன்படுகிறது.

மீன் வகைகள்: முடிக்கு தேவையான ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மீன் வகைகளில் ஏராளமாக கிடைக்கின்றன. ஒமேகா-3 அமிலங்கள் முடி உதிர்வை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்பாட்டில் வைக்கும். முடியின் கருமை, வலிமைக்கு மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

சக்கரவள்ளி கிழங்கு: இரும்பு, தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை சக்கரவள்ளி கிழங்கில் ஏராளமாக உள்ளன. பீட்டா கரோட்டின் செல் வளர்ச்சிக்கு உதவுகிறது, முடி உதிர்வதைத் தடுக்கிறது. இவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளதால், முடியில் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கும்.

சூரியகாந்தி விதைகள்: பாந்தோதெனிக் அமிலம் எனப்படும் வைட்டமின் பி5 சூரியகாந்தி விதையில் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் ரத்த ஓட்டம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மருத்துவ அறிக்கையின்படி, பாந்தோதெனிக் அமிலக் குறைபாடுகள் முடி உதிர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, இதைக் குறைக்க சூரியகாந்தி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஓட்ஸ்: பீட்டா-குளுக்கன்ஸ், நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள ஓட்ஸ் முடி உதிர்வுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வழுக்கை மற்றும் முடி உதிர்தலுக்கு எதிராக ஓட்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: கோடைக்காலத்தில் உதடுகள் வறட்சி.. என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது.. 7 டிப்ஸ்..

Last Updated : Mar 4, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.