ETV Bharat / sukhibhava

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மை பயக்கும் எண்ணெய் எது தெரியுமா? - தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்

நமது வாழ்வில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

The goodness of cold pressed virgin coconut oil health benefits of coconut oil which is the best cooking oil தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள் தேங்காய் எண்ணெய்யின் பயன்கள்
தேங்காய் எண்ணெய்
author img

By

Published : Feb 11, 2022, 7:18 PM IST

இன்றைய சூழலில், நாமும் கடிகாரமுடன் சேர்ந்து சுழல்கிறோம். நமது லட்சியங்களை அடைவதற்காக, வேகமான வாழ்க்கை முறையைக் கையாண்டுவருகிறோம். இத்தகைய வாழ்க்கையில், நமது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.

நமது ஆரோக்கியம் தற்போது, பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கையில் உள்ளது. சமையலறையில் காணப்படும் ஒவ்வொரு பொருளிலும்கூட, நம் ஆரோக்கியத்தில் முதன்மையாகத் திகழ்கிறது.

நம் சமையலறையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றி கூறினால், நாம் சேமித்துவைக்கும் முக்கியமான பொருள்களில் ஒன்று நமது சமையல் எண்ணெய். அதிலும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தினால், ஆரோக்கியம் பெருகும்.

The goodness of cold pressed virgin coconut oil health benefits of coconut oil which is the best cooking oil தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள் தேங்காய் எண்ணெய்யின் பயன்கள்
நன்மை பயக்கும் எண்ணெய்

உடல் எடையைக் குறைக்கும்!

தேங்காய் எண்ணெய் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைக் காக்கிறது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகிறது. தேங்காய் எண்ணெய்யை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.

நமது உடலில் ஹார்மோன்கள் மாற்றத்தால் உடல் பருமன் ஏற்படுகிறது. தேங்காய் எண்ணெய் உட்கொள்வது மூலம் ஹார்மோன்களைச் சமநிலையில் இருக்கும். மேலும் உடல் பருமனாகாமல் இருக்க வழிவகுக்கும்.

அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது குறைத்துவிடுகிறது. அத்துடன், இதிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் உடல் எடையைக் கூடாமல் வைக்கிறது.

தொற்று நோயை அழிக்கும்!

உணவில் தேங்காய் எண்ணெய்யைச் சேர்த்தால், உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதனால் இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கும். தேங்காயில் 90 விழுக்காடு சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.

மருத்துவ குணம் நிறைந்த எண்ணெய்

தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட ஆன்ட்டிவைரல், நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது. இதில் லாரிக் அமிலம் இருப்பதால் உங்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

இந்தக் காலத்தில், பெண்கள் அதிகம் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்கள் தேங்காய் எண்ணெய் உட்கொண்டால், இந்தப் பாதிப்புகள் குறையும்.

சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை முற்றிலுமாகச் சரிசெய்ய நாள்தோறும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட வேண்டும். அவை சிறுநீர்ப் பாதையில் உள்ள தொற்றுகளை அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை.

சீரான சர்க்கரை அளவு

உணவில் தேங்காய் எண்ணெய்யைத் தவறாமல் உட்கொள்வது, ரத்த சர்க்கரை அளவைச் சீராக்குகிறது. இது இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டிருப்பதால், மற்ற எண்ணெய்களுக்கு, இது ஒரு சிறந்த மாற்றாகும். இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது நீரிழிவு பிரச்சினைகளிலிருந்து மக்களைக் பாதுகாக்கும்.

அரிக்கும் தோல் அழற்சி அல்லது அடோபிக் டெர்மடிடிஸுக்கு எனப்படும் கொடுமையான தோல் நோய்களை அழிக்கும் தன்மையுடையது, தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் உள்ளன.

தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி வாய் கொப்பளித்துவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள், தாடைகளில் இருக்கும் கிருமிகள் அழியும். இது பெரும்பாலும் ஆயுர்வேதத்துடன் தொடர்புடையது. இவ்வாறு செய்வது வாயில் உள்ள பாக்டீரியாவை அகற்றவும், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதையும் படிங்க: குளிர் காலத்தில் சருமம் ஜொலிக்க வேண்டுமா...? இது மட்டும் போதும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.