ஆரோக்கியமான உணவு உட்கொண்டால், நாம் நம் உடல் எடையை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும். இவை நம் சருமத்தை புத்துணர்ச்சியூட்டுவதுடன், தலைமுடியின் அடர்த்தியை மேம்படுத்தும். இதனால் பளபளப்பான சருமம் கிடைப்பதுடன், முடி உதிர்தலும் குறையும்.
அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவு, நமது சருமத்தை மிருதுவாகவும், சுருக்கங்களை கட்டுப்படுத்தவும், நகங்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. பொதுவாக குளிர் காலங்களில் நமது சருமம் வறண்டு போகும். நம் மாய்ஸ்சரைசர்கள் உபயோகித்தாலும், சரியான முறையில் சருமத்தை பாதுகாக்க முடியாமல் போய்விடும். ஆகையில் சில உணவுகள் மூலம் நாம் நம் சருமத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவு பொருள்கள் குறித்து காணலாம்.
தண்ணீர்:
இது நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. தண்ணீர் நம் உடலுக்கும், தோலுக்கும் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது. தினமும் அதிகாலையில் இதமான தண்ணீர் குடித்தால் பலவகை நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
தினமும் இவ்வாறு செய்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக் கிருமிகளை சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். மேலும் நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, எப்போதும் நம்மை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆகையால் தினமும் தேவையான நீரை பருக வேண்டும்.
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், தோல் வறட்சி, உடலில் அடைபட்ட துளைகள், சுருக்கங்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மேலும், நீரிழப்பு ஏற்பட்டு சோர்வைத் தூண்டி, நம்மை வயதானவர் போல் காட்சிப்படுத்தும்.
கொழுப்புச் சத்து:
நாம் தினசரி உட்கொள்ளும் உணவில், 20 முதல் 30 சதவீதம் கொழுப்பு சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் A,B,E,K கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் செல்களில் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் கொழுப்பு மிக முக்கிய பங்காக அமைகிறது.
மேலும் உடலுக்கு தேவையான ஆற்றல்களை தருவதும், உடல் உறுப்புகளை பாதுகாப்பதையும், உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வதையும் கொழுப்புச் சத்து செய்துவருகிறது.
இதற்காக உடலில் நல்ல கொழுப்புகள் ஏற்படுத்தும் உணவு பொருள்களான அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், சால்மன் மீன் மற்றும் கானாங்கெளுத்தி மீன் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் சருமத்தில் இயற்கையான எண்ணையை உற்பத்திசெய்யும். மேலும் சருமம் பளபளப்பாக காணப்படும். இதனால் நாம் என்றும் இளமையாக இருக்கலாம்.
ஆனால் இதற்கு எதிராக ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை உட்கொண்டால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் நிறைந்து பல நோய்களை உண்டாக்கும். ஆகையால் இத்தகைய உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கேரட்:
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவை UV கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். குளிர்காலத்தில் சூரிய ஒளி பிரகாசமாக இல்லையென போதிலும், UV கதிகள் நம்மை சுற்றிதான் இருக்கும். இவற்றிலிருந்து நம்மை காக்க கேரட் பெரிதாக உதவும்.
கேரட்டில் வைட்டமின் A, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இவை நமது சருமத்தை வறட்சியிலிருந்தும், தோல் பிரச்சினையிலிருந்தும் பாதுகாக்கும். மேலும் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், முகப்பருக்கள் நீங்கி, சிகப்பழகு கூடும்.
கேரட் சாப்பிடுவதன் மூலம், நமது உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்பட்டும். இதனால் வயதான தோற்றமும் மறையும். இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றம் மாறும். ஆகையால் நாம் தினமும் ஒரு கேரட் ஆவது சாப்பிட வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்கள் உடலில் அதிக எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். உடல் நோய்வாய் படும் வேளையில் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், உடல் விரைவில் குணமாகும். சிறுநீரகத்தை பாதுகாக்கவும், சிறுநீரகத்தில் கல் வராமல் இருக்கவும் சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன.
ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், திராட்சை போன்ற உணவு பொருள்களை உட்கொண்டால், எலும்புகள், கண்கள், தோல் போன்ற பகுதிகளில் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில், வைட்டமின் A, C, புரோட்டின், பொட்டாஸியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்களும் இருக்கும்.
சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதால், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் தீரும். சருமம் பளபளவென இருக்கும். மேலும் உடலில் கெட்ட கொழுப்புக்கள் நீங்கி உடல் எடை குறையும். இந்த வைட்டமின் C நிறைந்த பழங்கள் சிறந்த குளிர்கால உணவாக இருக்கும்.
சர்க்கரைவல்லி கிழங்கு:
இனிப்பு உருளைக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் நிரப்புகிறது. இனிப்பு உருளைக்கிழங்கில் காணப்படும் அதிக அளவு பீட்டா கரோட்டின் சருமத்தை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து பளபளக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சிறிய நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கவும் அவை அவசியம்.
காலநிலை மாற்றத்திற்கு உணவில் மாற்றம் தேவைப்படுகிறது. கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேளை செய்யும் சூழல் ஏற்படுகிறது.
இதனால் உடல் செயல்பாடு குறையும். ஆகையால் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மூட்டு பிரச்சினைகள், எடை அதிகரிப்பு, வைட்டமின் D குறைபாடு, மலச்சிக்கல் ஆகியவை சுய தனிமைப்படுத்தலின் போது மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளாகும்.
குளிர்காலத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்வதும் கவலையை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் உங்கள் உணவை செறிவூட்டுவது, இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க உதவுவதோடு, நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல சருமம் மற்றும் ஒட்டுமொத்த நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க மேற்கூறிய உணவுவகைகள் உதவும்.
இதையும் படிங்க: பளபளக்கும் சர்மம் வேண்டுமா - அப்போ கடிங்க கேரட்... குடிங்க கேரட் ஜூஸ்