ETV Bharat / sukhibhava

இந்த மழைக்காலத்திலும் தோல் பளபளக்க வேண்டுமா... இதோ உங்களுக்காக 5 வீட்டு வைத்தியங்கள்!

இந்த மழைக்காலங்களில், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, நீங்கள் இந்த பராமரிப்பு நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம்.

5 homemade skincare remedies you need to try this monsoon
இந்த மழைக்காலத்திலும் தோல் பளபளக்க வேண்டுமா... இதோ உங்களுக்காக 5 வீட்டு வைத்தியங்கள்!
author img

By

Published : Jul 9, 2023, 6:28 PM IST

டெல்லி: பருவமழைக் காலம் வந்துவிட்டது, இனி இதமான வானிலை, மேகமூட்டமான வானம் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவற்றை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். கொளுத்தும் கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற இது ஒரு நல்ல நேரம் என்ற போதிலும், அதிக ஈரப்பதம் காரணமாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்த சீசன், மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்காது! ஏனெனில், இப்போதுதான் உங்கள் சருமத்திற்கு அதிக கவனம் தேவை.

வேதிப் பொருட்கள் அடிப்படையிலான தயாரிப்புகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் சருமத்தை நன்கு தயார்படுத்துவதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்ட சில வீட்டு சமையல் குறிப்புகளை முயற்சி செய்யலாம். சரும மற்றும் தோல் ஆரோக்கிய நிபுணர் துஃபான் தாஸ் பகிர்ந்துள்ள சில தோல் பராமரிப்பு ரெசிஃபிகள் உங்களுக்காக இங்கே தரப்பட்டு உள்ளன.

பால் மற்றும் தேன் கலந்த ஃபேஸ்வாஷ்:

தேவையான பொருட்கள்: பால், தேன்.

செய்முறை: ஒரு தேக்கரண்டி தேனை, இரண்டு தேக்கரண்டி பாலுடன் சேர்த்து, நன்கு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் சமமாக தடவி 2-3 நிமிடங்கள் கழித்து மெதுவாக மசாஜ் செய்யவும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் சீராக கழுவவும். இந்தப் பால் மற்றும் தேன் ஃபேஸ்வாஷ் சருமத்தை திறம்பட பிரகாசமாக்குகிறது. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பருப்பு மற்றும் பால் ஸ்க்ரப்:

தேவையான பொருட்கள்: பருப்பு, பால்.

செய்முறை: இந்த ஸ்க்ரப்பை உருவாக்க, பருப்பை முதல்நாள் இரவு, தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, ஊறவைத்த பருப்பை, பச்சைப் பாலுடன் பேஸ்ட் பதம் வரும் வரை கலக்கவும். இந்தப் பேஸ்டை, உங்கள் கழுத்து, தொண்டை மற்றும் முகத்தில் தடவவும். நீரில் கழுவுவதற்கு முன் 5-10 நிமிடங்கள் காத்திருக்கவும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை இந்த ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவதால், உங்கள் சருமத்தில் ஏற்படும் தோல் உரிதல் பிரச்னையில் இருந்து தீர்வு அளித்து, சருமத்திற்குப் பிரகாசமான நிறத்தை வழங்குகிறது.

குளிர்ந்த வெள்ளரி ஃபேஸ் பேக்:

தேவையான பொருட்கள்: 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் அல்லது சாறு, 1/4 கோப்பை துருவிய வெள்ளரி.

செய்முறை: துருவிய வெள்ளரி உடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் கலவையை உருவாக்கவும். உங்கள் முகம் மற்றும் கழுத்தில் பேக்கை மெதுவாகப் பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை புதுப்பொலிவு பெற உதவுகிறது. அதன் செயல்திறனை அதிகரிக்க, இந்த கலவையை, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் உலர விடவும். பின், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

பலன்கள்:

புத்துணர்ச்சி: கற்றாழையின் இயற்கையான பண்புகள், வெள்ளரிக்காயின் குளிர்ச்சி விளைவுகளுடன் இணைந்து, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சி உடன் மிளிரச் செய்கிறது.

நீரேற்றம்: கற்றாழை மற்றும் வெள்ளரிக்காயில் ஈரப்பதமூட்டும் பண்புகள், உங்கள் சருமத்தை ஈரப்பதம் கொண்டதாக மாற்றுகிறது, வறட்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் உங்கள் நிறத்தை மிருதுவாகவும் பிரகாசமாகவும் மாற்றுகிறது. இந்த கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஷியல் பேக், உங்கள் தோலை மிருதுவாகவும் புத்துணர்ச்சி ஆக இருக்க உதவுகிறது.

ஓட்ஸ் மற்றும் பருப்பு உப்தான்:

தேவையானவை: அரை கப் ஓட்ஸ், 1 கப் பருப்பு, கால் கப் அரிசி மாவு, 8-9 பாதாம், 1 சிட்டிகை மஞ்சள் தூள், பன்னீர் (தேவைக்கேற்ப).

செய்முறை: பருப்பு, ஓட்ஸ் மற்றும் பாதாம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் பாதாம் ஆகியவற்றை ஒன்றாக நன்றாக கலக்கவும். இந்த கலவையில் அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும். பின் சிறிதுசிறிதாக, பன்னீர் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் பதம் உருவாகும் வரை நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம், கைகள் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் காத்திருக்கவும். பேஸ்ட் காய்ந்ததும் சுத்தமான நீரால் கழுவவும். ஓட்ஸ் சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, சருமத்தை மென்மையாக்குகிறது.

ஓட்ஸ், பருப்பு மற்றும் பாதாம் ஆகியவற்றின் இயற்கையான சுத்திகரிப்பு பண்புகல், சருமத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை திறம்பட நீக்குகிறது. ஓட்ஸ் அழுக்கு மற்றும் நச்சுகளை நீக்குகிறது, அதே நேரத்தில் பருப்பு, இறந்த சரும செல்களை நீக்குகிறது. சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

சருமத்தை மென்மையாக்குகிறது: ஓட்ஸ், சருமத்தை மென்மையாக்கும் நன்மைகளை வழங்குகிறது. ஓட்ஸில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்பு, சருமத்திற்கு மென்மையான மற்றும் மிருதுவான நிறம் கிடைக்கச் செய்கிறது.

ரோஜா இதழ் மாய்ஸ்சரைசர்: தேவையான பொருட்கள்: ஒரு கப் ரோஜா இதழ்கள், ஒரு கப் பன்னீர், ஒரு கப் கற்றாழை சாறு.

செய்முறை: ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பன்னீர் எடுத்துக் கொள்ளவும். அதை சூடுபடுத்தி, அதனுடன், ரோஜா இதழ்களுடன் கலக்கவும். இதழ்கள் அதில் சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் இதனுடன் இரண்டு தேக்கரண்டி கற்றாழை சாற்றை சேர்க்கவும். இதை நன்கு கலந்து, கலவையை அறை வெப்பநிலையில் குளிர்விக்க விடவும். மாய்ஸ்சரைசர் அறை வெப்பநிலையை அடைந்தவுடன், அதை காற்று புகாத கண்ணாடி கொள்கலனில் மாற்றவும். கொள்கலன் இறுக்கமாக மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும். இது மாய்ஸ்சரைசரின் புத்துணர்ச்சியைப் பாதுகாக்க உதவும்.

அதன் தரத்தை பராமரிக்க, மாய்ஸ்சரைசரை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இது சுமார் 15-20 நாட்களுக்கு நன்றாக இருக்கும். இந்த மாய்ஸ்சரைசர் ரோஜா இதழ்களால் செறிவூட்டப்பட்டுள்ளதால், முகப்பரு மற்றும் முகச் சுருக்கங்களை குறைப்பதோடு மட்டுமல்லாது, தோலின் பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது.

குறிப்பு: எந்தவொரு புதிய ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பும், பேட்ச் டெஸ்ட் செய்துகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Health tips: தலைவலிக்கு அடிக்கடி மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.