ETV Bharat / sukhibhava

மது குடிக்காதோருக்கும் வரலாம் கல்லீரல் பாதிப்பு…மருத்துவர்கள் சொல்வது என்ன? - how to cure liver naturally

liver damage occur even for non alcoholics: குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, குடிக்காதவர்களுக்கு கூட ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்கான காரணம் என்ன? இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

மது குடிக்காதவர்களுக்கு கூட கல்லீரல் பாதிப்பா?...மருத்துவர்கள் சொல்வது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 2:29 PM IST

சென்னை: மனிதனின் உடல் உறுப்புகள் நல்லபடியாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மனித இனம் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று கல்லீரல் பிரச்சனை.

கல்லீரல் பாதிக்கப்பட்டால் என்னவாகும்? மூளையின் இயக்கத்தை கூட நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது என்கிறார் தீ லிவர் டாக்டர் என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கி வரும் மருத்துவர் ஆல்பி ஃபிலிப்ஸ். மனிதர்களின் உடலில் உள்ள மூளை, இதயம் போன்ற மற்றொரு முக்கிய உறுப்பு கல்லீரல். செரிமானம், புரத உற்பத்தி, நச்சற்றத்தாக மாற்றுதல் என ஏறக்குறைய 500 முக்கிய பணிகளை கல்லீரல் செய்து வருகிறது.

இதற்கு கனம் சேர்த்தால் கல்லீரல் செயலிலக்க தொடங்கிவிடும் என்கிறார். நாம் வாழ்வதற்கு முக்கியமாக இருக்கும் இந்த கல்லீரல் 70 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டால் தான் இதனுடையே பிரச்சனை வெளியே வரும் என்கிறார்.

மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் பாதிக்கப்படுத்துவதாக நினைத்து கொண்டிருப்போம், ஆனால் அது தான் இல்லை. மது அருந்தாத, ஏன் டீடோட்லராக இருக்கும் பலரது கல்லீரல் கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.

இதற்காக, மது அருந்தாத ஒருவரின் கல்லீரல் மோசமான நிலை அடைந்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது X தளத்தில் அரோக்கியமான மற்றும் அவருடைய முற்றிலும் பாதிப்படைந்த கல்லீரலின் புகைப்படங்களை ஒப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

  • Hello, on the left is how a liver looks like when you challenge it with alcohol. On the right is a part of normal liver from a young donor (representational) which went in to save the patient. The large ugly lump on the liver on the left is cancer. The little black and dark brown… pic.twitter.com/J7OKHqGwdm

    — TheLiverDoc (@theliverdr) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் உடல் பருமனாக இருந்ததும், தினசரி வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதுமே முக்கிய காரணம் என்கிறார். அதிலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது என்கிறார்.

இதற்கு காராணம் என்ன? நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு தான். நாவிற்கு ருசியாகவும், கண்களை கவரும் பாஸ்புட் உணவு பழக்கம் தான் முக்கிய காரணம் என தொடர்ந்து எச்சரித்து வருகிறார். கல்லீரல் நோய்களில் முக்கியமானது கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver disease).

இது கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேருவதால் ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான இரண்டு அடிப்படை காரணங்கள் உள்ளன, ஒன்று ஆல்கஹாலிக் கொழுப்பு கல்லீரல் நோய் (alcoholic fatty liver) மற்றும் மது அல்லாத அதாவது நான்-ஆல்கஹாலிக் கொழுப்பு கல்லீரல் நோய் (Non -alcoholic fatty liver).

  • This is the liver of an apparently perfectly healthy man.

    His liver function test (blood test) - perfectly fine.

    His only symptom was "gas trouble for three months" for which he was showing multiple local physicians, all of whom prescribed him antacids and were happy with… pic.twitter.com/DJ71u6p3BI

    — TheLiverDoc (@theliverdr) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் (alcoholic fatty liver): மது அருந்துவதால் கல்லீரலில் கொழுப்பு சேரும். இதன் விளைவாக இந்த நோய் வந்துவிடுகிறது. தினசரி மது அருந்துபவர்களுக்கு, அக்கேஷனல் டிரிங்கர் எனப்படும் எப்போதாவது மது அருந்துபவர்களுக்கும் எந்த விதமான வேறுபாடுகள் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒரு மனிதன் எவ்வளவு மது அருந்தலாம் என்ற கேள்விக்கு 0% என்கிறார் தீ லிவர் டாக்டர். மது அருந்தி நாம், கல்லீரலின் செயல்பாட்டிற்கு தடை போடுவதால் ஒரு கட்டத்திற்கு மேல் கல்லீரல் செயல்பட இழந்துவிடுகிறது.

நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் (Non-alcoholic fatty liver): இன்று இளம்வயதினர் பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதை நாம் கடந்து வருகிறோம். அதற்கு ஃபேட்டி லிவர் முக்கிய காரணம். சீரற்ற வாழ்க்கை முறை அதாவது முறையற்ற உணவுப்பழக்கம், உடலுழைப்பு இல்லாமல் இருக்கும் வாழ்கை முறை தான். ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவரை விட தற்போது உலகளவில் நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எவ்வளவு ஆபத்தானது? கல்லீரல் பிரச்சனையை முழுமைகாக கண்டுகொள்ளாமல் விட்டால் சீர்ரோஸிஸ் (Cirrhosis) எனப்படும் முழுமையாக பாதிப்படைந்த கட்டத்தை கல்லீரல் அடையும். அதன் கடைசி கட்டமாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் செயல்படாத போது, இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

சிகிச்சை: இதற்கு மிக முக்கியமான சிகிச்சை வாழ்கை முறை மாற்றம் தான். கல்லீரலுக்கு தானாக சீரமைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டதால், சில வாழ்கை மாற்றங்கள் மட்டும் செய்தாலே இரண்டு ஆண்டுகளில் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

உணவு முறையில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்க வேண்டும். வயது, வேலை செய்யும் முறையை அடிப்படையாக கொண்டு தினசரி கலோரி அளவை கணக்கிட்டுக் உணவருந்த வேண்டும். இனிப்பு, காரம் நொறுக்குத் தீனிகளுக்கு கண்டிப்பாக நோ சொல்ல வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தேலே இரண்டு ஆண்டுகளில் ஆரோக்கியத்துடனும், புது மனிதனாகவும் தோற்றமளிப்பதை காணலாம்.

இதையும் படிங்க: ஓவர் டியூட்டியால் இவ்வளவு பாதிப்புகளா?.... மருத்துவர்கள் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.