ETV Bharat / sukhibhava

முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?... என்னென்னனு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!

Drumsticks health benefits in Tamil: முருங்கைக்காயில் உள்ள சத்துக்களையும், முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

முருங்கைக்காய்
முருங்கைக்காய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:28 PM IST

சென்னை: புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் போன்றவை விலையுயர்ந்த காய்கறிகளில் தான் கிடைக்கும் என்பது தவறு. எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக்காயிலும் உள்ளது. முருங்கைக்காய் என்றாலே நடிகர் பாக்கியராஜ் தான் நினைவிற்கு வருவார். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு, தென்னிந்தியாவின் முக்கிய காய்கறியாக விளங்கும், முருங்கைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

எலும்பை வலுவாக்குகிறது: முருங்கைக்காயில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்பை வலுவாக்கும். பொதுவாக பெண்கள் முப்பது வயதை தாண்டும் போது, எலும்பின் அடர்த்தி படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது. முருங்கைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் இவற்றைத் தடுக்கலாம்.

பெண்களுக்கு சிறந்தது: முருங்கைக்காயில் உள்ள இரும்புச்சத்து, நல்ல புரதங்கள் மற்றும் தாதுக்கள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வாக காணப்படுகின்றன. மேலும் கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளின் அளவைக் குறைக்க முருங்கைக்காய் உதவுவதாக கூறப்படுகிறது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக முருங்கைக்காயை சாப்பிட வேண்டும். இது பிரசவத்திற்கு முன்னும், பின்னும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்கிறது. மேலும் தாய்ப்பால் அதிகரிக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு மருந்து: முருங்கைக்காயில் உள்ள தாதுக்கள் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

முடி மற்றும் சருமத்திற்கு நல்லது: முருங்கைக்காயில் விட்டமின் ஏ, போலிக் அமிலம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கிறது. முகப்பரு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் பளபளப்பான முடி கிடைக்கவும் வழிவகுக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

அம்மை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது: வெயில் காலங்களில் ஏற்படும் அம்மை நோய்களை முருங்கைக்காய் தடுக்கிறது. முருங்கைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள், அம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதையும் படிங்க: கர்பிணிகளுக்கான ட்யட் பற்றி தெரியுமா?... ஆரோக்கியமான குழந்தை பிறக்க இத ஃபாலோ பண்ணுங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.