டெல்லி: டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் புதன்கிழமை (ஆக.19) அவிகன் (ஃபாவிபிராவிர்) மாத்திரைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு புஜிஃபில்ம் டொயாமா கெமிக்கல் கோ லிமிடெட் நிறுவனத்துடனான உலகளாவிய உரிம ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இது டாக்டர் ரெட்டியின் அவிகன் (ஃபாவிபிராவிர்) 200 மி.கி மாத்திரைகளை இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும் விநியோகிக்கவும் பிரத்யேக உரிமைகளை வழங்குகிறது.
இதனை நிறுவனத்தின் அறிக்கை வாயிலாக அறிய முடிகிறது. இந்த மாத்திரைகள் கரோனா வைரஸின் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் ஆரம்பக்கட்டத்தில் மிதமான மற்றும் லேசான பாதிப்பு கொண்ட பாதிப்பாளர்கள் குணமடைய பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் என்று ரெட்டி ஆய்வக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "உயர்ந்த தரத்தில் செயல்திறன் மிக்க மாத்திரைகளை வழங்கவேண்டும் என்று நினைக்கிறோம்.
மலிவு விலை மற்றும் நோய் மேலாண்மை ஆகியவை எங்களின் நோக்கங்கள். இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவிகன் மாத்திரைகள் பலன் அளிக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.
டாக்டர் ரெட்டி ஆய்வகங்களின் இந்த அறிவிப்புக்கு பின்னர், அந்நிறுவன பங்குகள் மும்பை பங்கு சந்தையில் (பிஎஸ்இ) 0.10 சதவீதம் அதிகரித்து ரூ.4,508.90 க்கு வர்த்தகமாகின.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனுக்கும் இலவசமாக கரோனா தடுப்பு மருந்து!