சென்னை: பிரபல ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகரின் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறிய கருத்துக்கள் அரசி சாப்பாட்டை அதிகம் உட்கொண்டால் பருமன் அதிகரிப்பதுடன் தொப்பையும் போட்டு விடும் என்ற கருத்துக்கு நேர் மாறாக இருந்தது. ஆம், அரிசி உணவு உட்கொள்வதால் பருமன் அதிகரிக்காது எனவும் ரைஸ் இஸ் நைஸ் 'Rice is Nice 'எனவும் அவர் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓணம் பண்டிகையின்போது ஒரு தட்டு நிறைய சாதம் மற்றும் அதனுடன் காய்கறி கூட்டு வகைகளை வைத்துக்கொண்டு தனது வீடியோவை தொடங்கிய ருஜுதா திவேகர், சாதம் சாப்பிட்ட பிறகு உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதா? அரிசி சாப்பாடு அதிகப்படியான கொழுப்பு சத்தை உடலுக்கு வழங்குமே என்ற கேள்விகளுக்கு இல்லவே இல்லை என உறுதியாக பதிலளித்துள்ளார். அதிலும் குறிப்பாக நீங்கள், உங்கள் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்காக சாப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்கிறார் ருஜுதா திவேகர்.
அரசி சாப்பாட்டின் மீது ஏன் இப்படி ஒரு புகார் ; அரிசி சாப்பாடு சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்ற எண்ணமும், புகாரும் எங்கிருந்து எழுந்தது என்பதற்கு அந்த வீடியோ மூலம் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது, ஸ்பூனால் எடுத்து உண்ணும் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்கள்தான் உயர்ந்த கலாச்சாரமாக பார்க்கப்பட்டது எனவும், சோற்றை கையால் உட்கொள்ளுவதும், தரையில் அமர்ந்து உணவு உட்கொள்ளுவதும் இழிவாகப் பார்க்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், பிரச்சனை அரசி உணவில் இல்லை நமது மூளையில்தான் இருக்கிறது எனக்கூறியுள்ள ருஜுதா திவேகர், அரிசி நமது அடையாளம், நமது கலாச்சாரம் மற்றும் நமது வாழ்க்கையின் ஒரு பகுதி என தெரிவித்தார். அதனால்தான் அந்த அரிசி சாதத்தை உண்கொண்ட உடன் நமக்குள் அப்படி ஒரு திருப்தி ஏற்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரிசி உணவுகளை தவிர்த்தால்; நமது அன்றாட உணவில் இருந்து அரிசி உணவுகளை விலக்கி வைத்தால், அது உங்கள் சருமம், முடி மற்றும் செரிமானம் அனைத்தையும் பாதிக்கும் என ருஜுதா திவேகர் கூறியுள்ளார். உங்கள் மாநிலத்தில் எந்த வகையான அரசி விளைகிறதோ அதுவே உங்கள் ஆரோக்கியத்தின் அடையாளம் எனக்கூறிய அவர், “உங்கள் பிராந்தியத்தின் அரிசி உங்களுக்கு சிறந்தது. ‘பீகாரின் மார்ச்சா அரிசி’ முதல் மகாராஷ்டிராவின் 'வட கோலம் அரிசி', கேரளாவின் 'நவரா அரிசி, உள்ளிட்டவைகளை அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் உட்கொண்டு வாழ்வதுதான் சிறந்தது எனவும், அரசி உணவை உட்கொள்வதால் உங்கள் உடலில் கொழுப்பு சேராது எனவும் கூறியுள்ளார்.
அதே நேரம் அரிசி உணவுடன் காய்கறி, கீரை வகைகள் அல்லது மாமிச உணவுகள் என உங்களுக்கு பிடித்தமான ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உண்ணுங்கள் எனவும், உடற்பயிற்சி மேற்கொண்டு புத்துணர்ச்சியுடன் வாழுங்கள் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரிசி சாப்பாடு செய்வதற்கான சரியான வழிமுறை, அரிசியை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன் பிறகு சமைக்க வேண்டும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: How to make a soft Idli : இட்லி-னா மல்லி பூ போல இருக்கனுமா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.!