ETV Bharat / sukhibhava

உலக வாய் சுகாதார நாள்: பற்களைப் பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்துகொள்வோம்! - உலக வாய் சுகாதார தினம்

வாயில் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மார்ச் 20ஆம் தேதி உலக வாய் சுகாதார நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகளவில் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த முக்கியத்துவங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

Do Not Ignore Your Oral Health
Do Not Ignore Your Oral Health
author img

By

Published : Mar 20, 2021, 5:04 PM IST

வாயில் ஏற்படும் நோய்கள் உலகில் உள்ள பல நாடுகளுக்கும் பெரும் சுமையாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நோய்கள் மக்களை வாழ்நாள் முழுவதும் பாதித்து பற்களில் வலி ஏற்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய் நோய்களால் சுமார் 3.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 கோடி குழந்தைகள் பல் பிரச்சினைகளால் பாதிப்படைந்துள்ளனர். எனவே இன்றைய நாளில் வாய் சுகாதாரம் குறித்து தெரிந்துகொண்டு அதனை எப்படி பேணி காப்பது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

பொது சுகாதாரத்தின் மீது வாய்வழித் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் இந்தியன் டென்டல் அசோசியோஷனின் கருத்துப்படி, வாய் தொடர்பான நோய் பொது சுகாதாரத்தின் மீது சில தாக்கங்களை ஏற்படுத்தும்.

இதய நோய்

பல் ஈறு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரு மடங்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. முன்பே இதய நோய் உள்ளவர்கள் வாய் சுகாதாரம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பக்கவாதம்

வாய் நோய்களுடன் பக்கவாதத்துக்குத் தொடர்பிருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

நீரிழிவு நோய்

வாயில் உள்ள நோய்த்தொற்றுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயாளிகள் ஈறு நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சுவாசப் பிரச்சினைகள்

வாய்த் தொற்று உள்ள நபர்கள் நிமோனியா போன்ற சுவாச நோய்களால் பாதிக்கப்படலாம்.

கர்ப்பப் பிரச்சினைகள்

குறைப்பிரசவம், சிறிய உருவிலான குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஈறு நோய் இருப்பதால் ஏற்படலாம். பிரசவத்தை ஏற்படுத்தும் திரவங்கள் ஈறு நோய் உண்டாக்கும் பாக்டீரியாவினால் தூண்டப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

வாய் நோய்கள்

பல் வலி

சொத்தைப் பற்கள்

கறை படிந்த அல்லது மஞ்சள் நிற பற்கள்

பல் கூச்சம்

உடைந்த பற்கள்

பல் சிதைவு

ஈறு நோய்

வாய்ப் புற்றுநோய்

வாய்ப் புண்கள்

பல் அரிப்பு

துர்நாற்றம்

என்னென்ன செய்யலாம்?

உங்கள் குழந்தை ஒரு வயதை நிறைவு செய்தவுடனோ அல்லது முதல் பல் முளைத்த பிறகோ பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

ஒரு மெல்லிய துணியிலோ அல்லது மென்மையான காட்டன் துணியிலோ உங்கள் குழந்தையின் ஈறுகளைச் சுத்தம் செய்யுங்கள்.

மென்மையான பல் துலக்குவான் வைத்து குழந்தையின் பற்களை உணவு அருந்திய பின்பும் படுக்கைக்குச் செல்லும் முன்பும் சுத்தம் செய்யுங்கள்.

இரண்டு பற்கள் முளைத்த பிறகு ஒரு நாளைக்கு ஒருமுறை பற்களை மெதுவாகப் ஃப்ளாஸ் செய்யுங்கள்.

உங்கள் குழந்தை மருத்துவரிடமிருந்தோ பல் மருத்துவரிடமிருந்தோ தாய்ப்பால் கொடுப்பதை எப்பொழுது நிறுத்த வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு வயது நிறைவுசெய்த பின்பு பாட்டிலிலிருந்து உணவுகளைக் கொடுக்க பழக்குங்கள்.

சிறார்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

எப்படி பல் துலக்குவது, எப்படி ஃப்ளாஸ் செய்வது என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

உங்கள் பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் இருக்கும் ஃபுளுராய்டு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்காணியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு ஃபுளுராய்டு சிகிச்சை செய்யலாமா என்பதையும் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் உபயோகிக்கும் மவுத்வாஷ் குறித்து பல் மருத்துவரிடம் கேட்டறியுங்கள். சிப்ஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

ஏழு வயதில் குழந்தைகளுக்கு முழுமையான பல் சீரமைப்பு குறித்த மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் உங்கள் குழந்தைகளின் பல் சீரமைப்பு சரியாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பெரியவர்கள்

உங்கள் பல் மருத்துவரைத் தவறாமல் சந்தியுங்கள்.

நீங்கள் தினமும் சோர்வாக இருந்தாலும், பற்களை துலக்கவும், ஃப்ளாஸ் செய்யவும் தவறாதீர்கள்.

துரித உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பல் மருத்துவரை சந்திப்பது ஆபத்தா... மருத்துவரின் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.