ETV Bharat / sukhibhava

கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள நீரிழிவு நபர்களுக்கான சில டிப்ஸ் - Diabetes Patient Foods

கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களுக்கும், நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்குமே முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள
கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள
author img

By

Published : Apr 26, 2021, 2:26 PM IST

Updated : Apr 27, 2021, 6:29 AM IST

மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு வகையான கால நிலைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் கரோனா என்னும் கொடிய நோய் மனித சமுதாயத்தைப் பெரும் பாதிப்பிற்கு இட்டுச்செல்கிறது.

கரோனா தாக்கம் பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களுக்கும், நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்குமே முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் நீரிழிவு நோயாளிகளுக்கான சில டிப்ஸ் இங்கே…

கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள
கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள

நீரிழிவு (Diabetes Mellitus)

நீரிழிவு நோய் என்பது நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். உடலில் இன்சுலின் செயல்பாடு குறைவால் ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை (Glucose) காணப்படுகிறது. ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான குளுக்கோஸ் அளவு> 80/120 (அ) 80/140 ஆக இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்:

  • ஹைப்பர்கிளைசீமியா (அ) கிளைக்கோசூரியா > ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகக் காணப்படுவது.
  • நீரிழப்பு (Dehydration) > உடலிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றத்தால், உடலில் நீர் இழப்பு ஏற்படுவதால் நா வறட்சி, அதிக தாகம் எடுத்தல் (அடிக்கடி நீர் அருந்துதல்).
  • பாலியூரியா > அதாவது சிறுநீரில் அதிகளவு சர்க்கரை (Glucose) வெளியேறுவதாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • சோர்வு மற்றும் எடை இழப்பு
  • உடலிலிருந்து பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் அதிகளவு வெளியேற்றத்தால் உடல் பலவீனமாக உணர்தல்.
  • அதிக பசி எடுத்தல்.
    நீரிழிவு நோய்க்கான உணவு பட்டியல்
    நீரிழிவு நோய்க்கான உணவுப் பட்டியல்

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள்:

  1. ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொழுப்பு (lipid) அளவைக் கட்டுக்குள் கொண்டுவருதல்.
  2. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மேற்கொள்ளுதல்.
  3. நாள்தோறும் உடற் பயிற்சி, நடை பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்தல்.
  4. மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ளுதல் (Regular Meditation).

மேலும், அவர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவையாக இருக்க வேண்டும். அதிலும், சர்க்கரை (Glucose) அளவு குறைவாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

அதேபோல், Junk foods, Fast foods என்றழைக்கப்படும் துரித உணவுகள், கிழங்குகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய்க்கான உணவு பட்டியல்
நீரிழிவு நோய்க்கான உணவுப் பட்டியல்

அவற்றில் சில...

பாக்கெட்டுகளில் அடைத்த சிப்ஸ், பொரித்த உணவுகள் (அப்பளம், கடைகளில் பொரித்த மீன், சிக்கன், ப்ரைட் ரைஸ்), ஊறுகாய், சாக்லெட்டுகள், அதிக இனிப்புள்ள (Glucose) பழங்கள்.

ஏனெனில் அதிகம் இனிப்புள்ள பழங்களில் ப்ரக்டோஸ் (Fructose) இருப்பதால் அவ்வகை பழங்களை அளவுடனே உண்ண வேண்டும்.

மாலை நேர சிற்றுண்டி
மாலை நேர சிற்றுண்டி

ப்ரக்டோஸ் பழங்கள் (அதிக இனிப்புள்ள பழங்கள்)

அவற்றில் சில...

வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், திராட்சை, சப்போட்டா இவற்றை அளவுடன் உண்ணலாம்.

நீரிழிவு நோய் அவஸ்தையால் இருக்கும் நபர்கள் கார்போஹைட்ரேட் (carbohydrate) குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவை உண்ண வேண்டும்.

ரிழிவு நபர்களுக்கான சில டிப்ஸ்
நீரிழிவு நபர்களுக்கான சில டிப்ஸ்

உதாரணமாக நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு உண்ண வேண்டிய உணவு அட்டவணையைப் பார்ப்போம்:

நேரம்உணவு (Menu) அளவுடன்

காலை

6:00 AM

தேநீர் (அ) சர்க்கரை இல்லாத பால் (1 டம்ளர் (200 ml))
8:00 AMகேப்பை ரொட்டி (4), புதினா சட்னி (1 cup)
11:00 AMஎலுமிச்சை ஜூஸ் (அ) கொய்யா (1)

மதியம்

1:30 PM

சாதம் (750 கிராம் (அ) 1 Plate), சுண்டக்காய் வற்றல் குழம்பு (ஏதாவது குழம்பு), பாகற்காய் பொறியல், அவித்த முட்டை (1)

மாலை

4:30 PM

வேகவைத்த சுண்டல் (1 cup) (அ) முளைகட்டிய பயறு வகைகள்

இரவு

8:00 PM

சப்பாத்தி (அ) இட்லி (4), காய்கறி குருமா (அ) சட்னி
9:30 PMபால் (சர்க்கரை இல்லாமல்)

இவை ஒரு நாளைக்கு உண்ண வேண்டிய நீரிழிவு நோயாளிகளுக்கான உதாரணமான உணவாகும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் (வைட்டமின் - ஏ, சி) போன்றவற்றை அதிகம் சேர்த்தாலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகப்படுத்துவதற்கும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குமான வழியாகும்.

Last Updated : Apr 27, 2021, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.